பக்கம்:ஒத்தை வீடு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஒத்தை வீடு கட்சிக் சண்டைகள், கோவில் சண்டைகள் என்று பலப் பல சண்டைகள் நடக்கும்." "இதே சாதியம், மதங்களுக்கும் பொருந்தும். இவையும் மூன்று வகை. மூன்றும் மூன்றும் சேர்ந்தும், கிளை பிரிந்தும், யாருக்கு யாருடன் தகராறு என்று கண்டறிய முடியாத பெரும் போர்களைத் தோற்றுவிப்பதும் உண்டு. அதாவது, இரண்டாவது மூன்றில் ஒவ்வொன்றும், முதலாவது மூன்றில் எதில் சேர்கிறது? ஏன் சேர்கிறது? என்பது சேர்கிறவர்களுக்கும், சேர்த்துக் கொள்கிறவர் களுக்கும் புரியாது. சாதி - மதக் கலவரங்களில், இதுவே பெருங் கலவரமாகும். ஆனாலும், எப்படியோ, துண்டுபட்ட ஊர்கள் ஒன்றுபடும். ஆனாலும், இந்தச் சண்டைகள் ஜலதோசம் மாதிரி, சட்ட ஒழுங்கு நடவடிக்கையால் ஒரு வாரத்திலும், போலீஸ் தலையீடு இல்லாமல் ஏழு நாட்களிலும் தீர்ந்து போகும். 'மறப்போம்; மன்னிப்போம். என்ற தத்துவம், கொடி கட்டிப் பறக்கும்." "இந்த ஆறுவகைக் கிராமங்களிலும், ஒரு வகை வீடோ அல்லது வீட்டுக் குவியல்களோ இருக்கும். இதற்கு ஒத்தை வீடு' என்று பெயர். இதில் இருப்பவர்களுக்கு ஒத்தை வீட்டுக்காரன் என்ற பட்டப்பெயர். இந்தக் குடும்பத்தினரை, வந்தேறிகள் அல்லது வந்தட்டிகள் என்பார்கள். இந்த ஒத்தை வீட்டுக்காரக் குடும்பத்துடன் சண்டை என்று வந்தால், சொல்லுக்குச் சொல். 'ஒத்தை வீட்டுப் பயலே. ஒனக்கா இவ்வளவு திமிரு. என்கிற வசைச் சொல் வந்தபடியே இருக்கும். இந்த ஒத்தை வீட்டுக்குப் பங்காளி பலம் கிடையாது. பண பலமும் கிடையாது. ஒட்டுக்கள் குறைவு என்பதால், உள்ளூர் அரசியல்வாதிகளும் சீண்டுவதில்லை." "இந்த வகைக் குடும்பத்தை, சொந்த சாதிக்காரனும் அடிப்பான்; எந்த சாதிக்காரனும் அடிப்பான். எங்க வீட்டு நாயை எப்படி அடிக்கலாம் என்று கேட்கும் ஊரில், இந்த ஒத்தை குடும்பத்திற்கு நாதி கிடையாது. இந்தக் குடும்பத்தினரை, யார் வேண்டுமானாலும் அடிக்கலாம். இவர்கள் சாதி இருந்தும், தள்ளாமல் தள்ளி வைக்கப்பட்டவர்கள். சமயம் இவர்களுக்குச் சமயத்தில் உதவாது. ஆனாலும், இப்படிப்பட்ட ஒத்தை வீடுகளில் சிலர், பெருத்த பங்காளிக் குடும்பத்தில் பெண் கொடுத்து, பாதுகாப்பைத் தேடிக் கொள்வார்கள். அத்தகைய பலமான பங்காளிக் குடும்பமும், இந்த ஒத்தை வீட்டில் பெண் எடுக்குமே தவிர, பெண் கொடுக்காது." "இப்படிப்பட்ட பின்னணியில், எங்கள் வீடு ஒத்தைவீடு. இத்தகைய சூழலில் ஒதுங்கிப் போக வேண்டிய என் அம்மாவோ, கிராமத்து யதார்த்தம் புரியாத வாயாடி பட்டறிவு இல்லாத பாமரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/107&oldid=762158" இலிருந்து மீள்விக்கப்பட்டது