பக்கம்:ஒத்தை வீடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IX மதம், பத்தினித் தன்மைக்கு கற்பு தேவையில்லை என்று உறுதியாகக் கூறுகிறது. இதுபோன்ற கருத்துக்கள், என்போன்ற வயோதிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். எப்படிப்பட்ட வாதங்கள்! நூல் முழுவதும் இப்படிப்பட்ட மாறுபட்ட சிந்தனைகள். ஒரு வரியைக்கூட தள்ளிவிட்டு போக முடியவில்ல்ை சினிமாத்தனம் முடிவு சற்று சினிமாத்தனமாக இருந்தாலும், தவறுக்கு வருந்துபவனை வாழ்வதற்கு சமூகம் அனுமதிக்க வேண்டும் என்ற நேர்சிந்தனை, இந்த நூலைப் படிக்கும், பல தன்னினச் சேர்க்கையாளர்களுக்கு, நம்பிக்கையையும், நல்லவழி சென்று நல்லபடி வாழ்வதற்கான ஊக்கத்தையும் கொடுக்கும். என்னைப் போன்ற மருத்துவர்களெல்லாம், நோயாளிகளிடம் நிறையப் பேசி, ஆலோசனை வழங்கலாம். ஆனால், ஒரு "புதைமண்" - ஒரு "ஒத்தை வீடு" ஏற்படுத்துகிற தாக்கம், ஆயிரம் மருத்துவர்களின் சேவையையும் மிஞ்சி நிற்கும்; உடனடிப் பலனையும் ஏற்படுத்தும். எல்லா இளைஞர்களும், அவர்களைப் பெற்றவர்களும் கண்டிப்பாகப் பலமுறை படிக்கவேண்டிய நூல். இது சிபாரிசு அல்ல; ஆலோசனை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/11&oldid=762161" இலிருந்து மீள்விக்கப்பட்டது