பக்கம்:ஒத்தை வீடு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ஒத்தை வீடு அல்லோபதிக்காரன் ஆய்வு அறிக்கை விடுவான்னு கிண்டல் அடிப்பார் ஆனால், அதனாலே, எந்தக் கோளாறும் கிடையாது என்பதுதான் எங்க கட்சி. அதோட, இன்னொரு விஷயம். ஆண்மைக் குறையுள்ளவன், பெண்டாட்டியெல்லாம் ஒழுக்கங் கெட்டவளாய் இருக்க வேண்டியதில்லே. ஆண்மையுள்ளவன் மனைவிகள் பத்தினிகளாய் இருப்பாங்க என்ற கட்டாயமும் கிடையாது வாட்ட சாட்டமானவன் ஆண்மை உள்ளவனா இருக்கணும் என்கிற அவசியமில்லே. பூஞ்சை உடம்புக்காரன் இயலாதவன் என்கிற பேச்சும் கிடையாது." மனோகர், மேலும் சில வினாக்களைக் கேட்கப் போனபோது, ஒரு யூனிபார வாலிபன், ஒரு பைலைக் கொண்டு வந்து, டாக்டர் சந்திரசேகரிடம் கொடுத்தான். அதன் மேலட்டையில் மனோகரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. கீழே மெடிகல் ரிப்போர்ட் என்ற ஆங்கில வாசகம். டாக்டர் சந்திரசேகர், அந்த பைலுக்குள் இருந்த எக்ஸ்ரே படத்தை உருவிப் பார்த்தார். கருப்பாய்ப் பளபளத்த பின்னணிப் படத்தில் வெளுப்பான நிழல்களைக் காட்டிய அந்த எக்ஸ்ரேயை மானிட்டரில் பொருந்திப் பார்த்தார் சர்க்கரை, ரத்தம், சிறுநீர் போன்றவற்றின் சோதனைக் குறிப்புக்களை படித்துப் பார்த்தார். மனோகர், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டான். உடல் ரீதியில் ஏதும் கோளாறு இருக்குமோ என்ற சந்தேகம். அப்படியானால், எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதில் ஒர் தீர்மானம். மனோகர், பிடித்திருந்த அவனது சொந்த உயிர், இப்போது டாக்டர் சந்திரசேகரின் கைக்கு மாறியது. சிறிது நேரத்தில், அவனின் கையை குலுக்கியபடியே, உயிர் கொடுத்தார். "கன்கிராஜ்லேஸன்ஸ் மனோ, உங்களுக்கு உடல் ரீதியிலும் எந்தக் கோளாறும் கிடையாது. ரத்தத்தில் சர்க்கரை, சாப்பாட்டிற்கு முன்பு 90. நார்மல். சாப்பாட்டிற்குப் பிறகு 130. நார்மல். ஆக நீரிழிவு கிடையாது. ரத்த அழுத்தம் 90 - 130; கச்சிதம். ஆண்மைக் குறைவுக்குக் காரணமான சயரோகமோ புட்டாளம்மன் நோயோ வந்ததில்லை. நான், ஆரம்பத்தில் சந்தேகப்பட்டதுபோல், பிட்டத்துக்குக் கீழே, உட்பக்கமாய்க் கட்டி ஏதும் இல்லை. அப்படி ஒரு கட்டி இருந்தால், அது ஆயுள் வரைக்கும் வலிக்காது. ஆனால், பாலியல் நரம்புகளை அழுத்தி, இறுக்கி அடம் செய்யும். இப்படிப்பட்ட கட்டியும் இல்லை. அதனால, ஆபரேஷனுக்கு அவசியம் இல்லை. இப்போ ஒரு நவீன முறை வந்திருக்கு செக்ஸ் ரீதியாய் பலவீனப்பட்ட ஆணுக்கு, ஒரு பலூன் மாதிரி வஸ்துவைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/113&oldid=762165" இலிருந்து மீள்விக்கப்பட்டது