பக்கம்:ஒத்தை வீடு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஒத்தை வீடு இருக்கக்கூடாது. இதனாலேயே ஒங்க கணவரை, தொழில் மரபையும் மீறி அதட்டுனேன். ஆனாலும்." கட்டில் சட்டத்தில், தலையணையை சுவரோடு சுவராய் போட்டு, அதன் மேல் தலை சாய்த்து கிடந்த சங்கரி, எதிரே பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தபடி, தனது முகம் பார்த்துப் பேசியவளின் வார்த்தைகளை, வேத வாக்காகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனாலும் என்று அவள் நாக்கை இழுத்துப் பிடித்தபோது, இவள் முகமும், தொலைக்காட்சிப் பெட்டியில் தடங்கல் ஏற்படும்போது வருமே, சுழிப்புக் கோடுகள், அவை போல் ஆனது. இந்த ஆனாலும் என்கிற வார்த்தை சொன்னது அனைத்திற்கும் சூடுபோடும் பதம் என்பதை உணர்ந்தவள்போல், சங்கரி, அந்தக் கவுன்சிலிங் பெண்ணை கண்களால் பரிசீலித்தாள். சம வயதுக்காரி, மனோ தடுமாற்றங்களை தீர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்டவள். உடம்பு பளபளத்தாலும், உடையில் படாடோபம் இல்லை. குண்டு மாம்பழ முகம். ஒவ்வொரு வார்த்தையும் கேட்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவள். சங்கரிக்கு, தனது அடுத்த கருத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தம் கொடுத்துவிட்டு, அவள் தொடர்ந்தாள். "பாலியல், இனப்பெருக்கம் போன்றவற்றில், நாம் இயற்கையிடம், குறிப்பாகத் தாவரங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ளவேண்டும். நம் முழங்கால் உயரத்திற்குச் சுருட்டை இலைகளோடு கிடக்குதே பிரளிச் செடி, அது வண்ணத்துப் பூச்சி, ஆரம்பத்தில் புழுவாய் இருப்பதுபோல், தரையோடு தரையாய் சின்ன சுருட்டை முளையாய்த் தோன்றும். இப்படிப் பல முளைகள் சிதறிக் கிடக்கும். இந்த முளைகள் எல்லாமே பெண் பாலாய் இருந்தால், இந்த முளைகளில் ஒன்று வேகமாய் வளர்ந்து, பெண் செடியாகி, ஒருவித இனமாற்றத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம், தரைக்கு வந்து, நீரில் கரைந்து, பிற முளைகளில் ஊடுருவி, . அத்தனை பெண் முளைகளையும், ஆண் செடிகளாக்கி விடும். இதில் இருந்து ஒங்களுக்கு ஏதாவது புரியுதா சங்கரி.?” சங்கரி, தலையணையை எடுத்துக் கட்டிலில் போட்டுவிட்டு, சம்மணம் போட்டு உட்கார்ந்து, முதல் தடவையாகப் பேசினாள். "புரியுது. சொல்ல வந்ததை முழுசா. முடியுங்க" "அப்படில்ல. ஒங்களுக்கு என்ன புரிந்திருக்கு என்கிறது எனக்கும் புரிந்தால்தான், நான் மேற்கொண்டு, சொன்னதைப் புரிஞ்சுகிட்டே பேச முடியும். நாம் என்ன பேசுகிறோம் என்கிறதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/115&oldid=762167" இலிருந்து மீள்விக்கப்பட்டது