பக்கம்:ஒத்தை வீடு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஒத்தை வீடு கவிழ்ந்தான். ஏதோ பேசுவதற்காக, முகத்தை முன்னோக்கி நிமிர்த்தப் போனான். முடியவில்லை. முயன்று, முயன்று பார்த்தான். கண்கள்தான், கசிந்தன. அவள், எடுத்த எடுப்பிலேயே தன்மீது தாவி, விழுந்து அழுவாள் என்று எதிர்பார்த்த அவனுக்கு, ஒரு ஏமாற்றம் அந்த ஏமாற்றமே, அவன் மனதை வைரப்படுத்தியது. அவளது எந்த முடிவையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மனம் சொல்லிக் கொடுத்தது. சங்கரி, இன்னும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அழுகையும், ஆத்திரமும், நீரும் நெருப்பும்போல் ஒருங்கே வந்தன. படுக்கையில் உட்கார்ந்து முட்டிக் கால்களைக் கட்டிக் கொண்டு முகம் புதைத்தாள். இடையிடையே அவனைப் பார்த்தாள். அவனைப் பேர்லவே, பார்க்க நினைத்து, பார்க்க முடியாமல், முகம் நீட்டியும் தலை கவிழ்த்தும் அல்லாடினாள். இதற்குள், ஒரு உறுதியனான முடிவுக்கு வந்த மனோகர், கட்டிலின் எதிரே உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தான். சட்டைப் பைக்குள் இரு மடிப்பாய் இருந்த ஒரு அரசாங்க முத்திரையிட்ட கவரை, ஒரு கையால் எடுத்தபடி, மறு கையால் அவள் முகத்தை நிமிர்த்தினான். அந்தக் கவரை, அவள் கைகளைப் பிரித்துத் திணித்தான். சிறிது நேரம் அசைவற்ற அவள் கண்களில், அந்தக் கவர் தாளாய்ப்பட்டது. அதன் மேல் அவளது பெயர், முகவரி. மனோகர், அந்தக் கவரை, அவளிடமிருந்து எடுத்து, உள்ள இருந்த காகிதத்தை, அவள் முட்டிக் கால்களில் வைத்தான். அதைப் படிப்பதைத் தவிர, அவளுக்கு வேறு வழியில்லை. மூன்றாம் ஆளாய்ப் படித்தவளின் உடல் நிமிர்ந்தது. கால்கள் சம்மண மிட்டன. கண்கள் பிரகாசித்தன. சாஸ்திரிபவனில், அவள் சேர வேண்டிய அலுவலகத்திலிருந்து வந்துள்ள கடிதம், அவள் வேலையில் சேர ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த அவகாசம் முடிய இன்னும் இருபத்தைந்து நாட்கள் உள்ளன. சங்கரி, பரவசப்பட்டாள். சாஸ்திரிபவனில், அவள் அப்போதே வேலை பார்ப்பது போன்ற பிரமை, சக தோழிகளுடன் பேசுகிறாள். சிரிக்கிறாள். அப்போது, அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில், அந்த மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/119&oldid=762171" இலிருந்து மீள்விக்கப்பட்டது