பக்கம்:ஒத்தை வீடு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ஒத்தை வீடு அடித்தாள். தலையில் குட்டினர்ள். அவன் சிரித்தபோது, இவள் அழுகை விக்கலாகி, திக்கலாகி, அவன் கழுத்துக்கு, இன்னொரு முகம் முளைத்ததுபோல் மவுனமாய் முற்றுப் பெற்றது. அவள்து கண்ணிர், மழை விட்ட தூவானமாய், அவன் கழுத்து மேட்டில் துளித் துளியாய் பல்கிப் பரவி நின்றது. அந்த ஒவ்வொரு துளியும், அவன் மனதில் ஒவ்வொரு நதியாய்ப் பிரவாகம் எடுத்தது. அத்தனை நதிகளும், ஒரு மகாநதியாகி, சங்கரிக்குள் சங்கமித்தது. கடலும் நதியும் ஒன்றானதில், அவர்களது கரங்களும், கால்களும் அலைகளாய் ஆர்ப்பரித்தன. நேரத்தை இழுத்துப் பிடித்த அலைகள் இயக்கத்தை நிறுத்தாத புதிய புதிய அலைகள்.

    • 安**
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/123&oldid=762176" இலிருந்து மீள்விக்கப்பட்டது