பக்கம்:ஒத்தை வீடு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 127 லுங்கிக்காரர்கள் உள்ளிட்ட கலப்புக் கூட்டமாக, அந்த இருக்கைகள் மாறின. ஆனாலும், மருந்துக்குக்கூட ஒரு பெண் இல்லை. திடீரென்று, அந்தத் தளத்தின் மேடை, வெள்ளை வாழைத் தண்டு விளக்குகளும், வண்ண பல்புகளும் அணைய அணைய, செஞ்சிவப்பு விளக்குகளால் பிரகாசித்தது. மிருதங்கம் மட்டும் பெரிதாய் ஒலிக்க, இதர இசைக்காரர்கள் தத்தம் கருவிகளுக்கு கதி சேர்த்தார்கள். எங்கிருந்தோ ஒரு பின்னணிக் குரல். "ஹாய் கேய். பாய்ஸ். வணக்கம். இப்போது நமது சங்கத்தின் பொதுச் செயலாளரும், பெரிய இடத்துப் பிள்ளையும், நடன சிகாமணியுமான மோகனனின் பரத நாட்டியமும், கதக் நாட்டியமும் நடைபெறும்." மோகனன் என்ற பெயர் வந்தபோது நமது தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் வி.ஐ.பி. பேர்களுக்கு ஒரு அழுத்தம் கொடுப்பார்களே, அப்படிப் பட்ட அழுத்தம் அந்த பெயருக்கு கிடைத்தது. நிகழ்ச்சி அறிவிப்பு முடிந்ததும், மேடை விளக்குகள் திடீரென்று அணைந்தன. அந்த இருள் மயத்தில் மெல்லிய இசைகூட பேயோசையானது. இரண்டு நிமிடங்களில் அதே மேடை விளக்குகள் மீண்டும் ஜொலித்தன. மேடையின் மையப் பகுதியில், மோகனன் நடனக் கச்சிதமாய் காணப்பட்டான். செம்பச்சை வேட்டி இறுகக் கட்டப்பட்டிருந்தது. இடுப்பிற்கு மேல் இடது பக்கம் மட்டும் ஒரு தாவணி போன்ற துணி தோளைத் தொட்டு, முதுகை வருடிக் கொடுத்தது. ஒருகால், லேசாய் தூக்கியும், இன்னொரு கால், நளின வளைவோடும் நின்றன. காதுகள் ஒன்றில் வளையம். இன்னொன்றில் கடுக்கன். முகத்தில் ஒரு பகுதி சிவப்பு. மறுபகுதி கரும்பச்சை கீழ் உதட்டில் மட்டும் லிப்டிக்ஸ். பரதநாட்டிய இலக்கணப்படி, அவன் இரண்டு தோள்களும் ஒரே நேர்கோடாய் இணைந்தன. கழுத்து அதன் முடிச்சானது. இடுப்பின் நடுப்பகுதி ஒரு முக்கோண வடிவமாகவும், இடுப்புக்கு கீழே இருந்து பாதம் வரை இன்னொரு முக்கோன வடிவமாகவும் தோன்றின. அவன் கைகளை நீட்டி வளைத்து, அவற்றில் ஒவ்வொன்றும் முட்டிகளில் முட்டியபோது அவையும் இரண்டு முக்கோணங்களாகின. மோகனன், ஒரு காலை மேலே துக்கி, பிறகு பக்கவாட்டிற்கு கொண்டு வந்தான் கால்களை சலங்கை சத்தத்துடன் முன்னால் வந்து தரைத்தட்டு செய்தான். பின்னர், குதிகாலில் நின்று அப்படியே திரும்பி அர்த்த நாரீஸ்வரரை வணங்கி அதே காலோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/127&oldid=762180" இலிருந்து மீள்விக்கப்பட்டது