பக்கம்:ஒத்தை வீடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΙ என்றாலும், இவன், மனிதநேயத்தோடு அணுகப்படுவதில்லை. மூலையில் ஒதுக்கி வைக்கப்படவேண்டிய பாத்திரமாகவே வைக்கப் படுகிறான். இத்தகைய பாத்திரத்தை பிரகாசப்படுத்துவதே இந்த "ஒத்தை வீட்டின்" நோக்கம், பொதுவாக, ஆண்மைக்குறைவு உள்ளவனின் மனைவி, எவைேடே ஓடிப்போவதாக அல்லது தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்படுகிறது. ஆண்மைக்குறைவு உள்ளவனுக்கு உள்ள ஆசை, இயலாமை, ஏக்கம், துன்பம், துயரம், அவமானம், சுய பரிதாபம் போன்றவற்றை எந்த எழுத்தாளியும், அதிகமாக சித்தறிப்பதில்லை. வியாபார ரீதியில், இந்த பிரச்சினைக்குரியவனின் மனைவி மீதே, எழுத்தாளக் கவனம் செல்கிறது. இந்த வகையில், இந்த "ஒத்தை வீடு", ஒரு பெண்ணின் பாலியல் ஏமாற்றத்தைப் பற்றி மட்டுமல்லாது, அவளது கணவனின் பிரச்சினையையும், அனுதாபத்துடனும் மனிதநேயத்துடனும் சித்தரிப்பதாகக் கருதுகிறேன். அனுபவச் சுழல் "பயர்" என்ற திரைப்படம், வந்தாலும் வந்தது. அதற்குப்பிறகு ஆண் பெண் ஆகிய இருபாலரின் ஓரினச்சேர்க்கை, நியாயப் படுத்தப்படுகிறது. இது ஒரு தவறான அணுகுமுறை என்று. நான் கருதியபோது, இதற்கு மாற்றாக, ஒரு படைப்பை உருவாக்க வேண்டுமென்று நினைத்தேன். நடுவண் அரசின் தகவல் துறை இணை இயக்குநராக பணியாற்றியபோது, எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதற்காக, பல ஓரினச்சேர்க்கை இளைஞர்களை சந்தித்து இருக்கிறேன். இவர்கள், எப்படி இந்த பாலியல் திரிபுக்கு உட்பட்டார்கள் அல்லது உட்படுத்தப் பட்டார்கள் என்பதை, நேரடியாகப் பேசித் தெரிந்திருக்கிறேன். இதன் அடிப்படையில் எழுந்ததுதான், "புதைமண்." ஒரு இளைஞன், தெரிவித்த அவனது அனுபவத்தைச் சுற்றியே, இந்தப் படைப்பை, சுழல விட்டிருக்கிறேன். இந்த இரண்டு கருப்பொருட்களிலும், ஆபாசம் தொனிப்பது இயல்பு. ஆனாலும், சமூகப் பொறுப்பாளன் என்ற முறையில், கத்திமேல் நடப்பது போலவே, சில விவகாரங்களை, இலைமறைவு காய்மறைவாய் எழுதி இருக்கிறேன். அப்படியே ஆங்காங்கே தவர்க்க முடியாதபடி, ஒரு சில வார்த்தைகள், வெளிப்பட்டால், அவை, ஒரு டாக்டர், தனது நோயாளியை, உடல் திறந்தும், மனம் திறந்தும் பார்ப்பது போன்றது. கத்தியும் "கத்தி"யும். கத்திமேல் நடந்தாலும், இறுதியில், "கத்தி"யும் சொல்ல வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இந்த இரண்டு படைப்புகளிலும், இறுதியாக வரும் சிகிச்சைமுறை, கட்டுரைத்தன்மை வாய்ந்ததுபோல் தோன்றலாம்: பிரச்சாரவாடை என்றும் பேசப்படலாம். என்றாலும், இது தவிர்க்க முடியாதது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/13&oldid=762183" இலிருந்து மீள்விக்கப்பட்டது