பக்கம்:ஒத்தை வீடு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமூத்திரம். 137 வார்த்தையால திட்டுவான். அப்பாவையும் மீறி பீரோவை, உடைத்து, பணத்தை எடுத்துக்கிட்டு போயிடுவான். அவன் நடவடிக்கையும் சரியாய் இல்ல. ஐ.ஏ.எஸ். ஆபீசரான எங்கப்பாவால, ஒரு நிமிஷத்துல அவனை உள்ள தள்ள முடியும். ஆனால், பெற்ற மகனாச்சே. திடீரென்று ஏனோ அந்த ரகள நினைப்பு வந்துட்டுது." "ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில ஒரு பிரச்சினை இருக்கு. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வும் இருக்கு. கவலப்ப. -ாத கவிதா. எப்போதாவது ஒருநாள் ஒங்கண்ணன் திருந்துவார். பல பெரிய இடத்துப் பிள்ளிங்க இப்படித்தான் இருக்குதுங்க." கவிதா சிறிது விலகி உட்கார்ந்தாள். காய்ந்த மண்ணை குடைந்து குடைந்து ஈர மண்ணை எடுத்து வலது கையால் பிசைந்தபடியே, இடது கையை அவன் தோளில் போட்டாள். போட்டபடியே கேட்டாள். “எனக்கு பயமா இருக்குது செல்வா! பேசாம படிப்பும் வேண்டாம் கிடிப்பும் வேண்டா முன்னு உதறிவிட்டு, ஒங்க கிராமத்துலப் போயி செட்டில் ஆயிடலாமா?" "ஒவ்வொரு நாளும் இப்படி கிளிப்பிள்ளை மாதிரி கேட்டதையே கேட்டால் எப்படி கவிதா? நீ இப்போ பிளஸ் டு. நானோ காலேஜ்ல முதலாம் வருடம், பட்டப்படிப்பை முடித்து எப்படியும் வேலைக்குப் போகணும். நீயும் உன் ஆசைப்படி டாக்டருக்கு படித்து கிளினிக் வைக்கணும். அதுக்குப்பிறகுதான் கல்யாணம்.” "அதுக்குள்ள நான் கிழவியாயிடுவேன். நீங்க கிழவனாயிடு விங்க." "காதலர்களுக்கு முதுமை, வந்தாலும் காதல் என்றுமே இளமைதான் கவிதா" "அதுவும் சரிதான். எப்போதோ வரப்போற கல்யாணத்தப் பற்றி இப்போ எதுக்கு பேசனும்?" "காதல் என்கிறது கல்யாணம் வரையுனனு கண்ணதாசன் பாடினாரே! நாம காதலர்களாகவே இருப்போம்." “தத்து புத்துன்னு உளறாதீங்க செல்வா! நான் ஒங்ககூட சுத்துறது எங்கப்பா காதுல விழுந்துட்டுதுன்னு வச்சுக்கவும் அவர் மூணுல ஒன்றை செய்வார் இல்லையான்னா மூன்றையும் செய்வார் ஒன்று, இந்த வயசிலேயே காதலாடின்னு அடி அடின்னு அடிப்பார் 3. O.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/137&oldid=762191" இலிருந்து மீள்விக்கப்பட்டது