பக்கம்:ஒத்தை வீடு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 புதைமண் இல்லன்னா அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்கள போலீஸ்ல பிடிச்சுக் கொடுப்பார்” "மூனாவது?" "என் படிப்பை நிறுத்திட்டு, ஏதாவது ஒரு பெரிய இடத்துப் பயலுக்கு கல்யாணம் செய்து வைப்பார்." 'நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கட்டும். கவலைப்படாதே. இன்னும் சில வருஷத்துல நாம் சொந்தக் காலுல நிற்கப் போறோம். அதுவரைக்கும் இலைமறைவு காய்மறைவா மூணு மாதத்திற்கு ஒரு தடவையோ அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு தடவையோ சந்திப்போம்." சுடிதாரோடு, அவள் நிறத்தைப் போன்ற புதுநிற துப்பட்டாவோடு அவனோடு இணைந்து உட்கார்ந்திருந்த கவிதா, அவன் அப்போதே தன்னை கைவிட்டு விட்டதுபோல் அழாக் குறையாய் பேசினாள். “என்ன செல்வா நீங்க ..? வாரத்துல ஒரு நாள்தானே சந்திக்கிறோமுன்னு நான் ஒரு வாரத்துல ஒரு நாள் தான் இருக்கணுமுன்னு ஆசைப்படுகிறேன். ஆனா நீங்க என்னடான்னா, மாதக் கணக்கில வாய்தா போடுறீங்க. போகட்டும் உங்களுக்கு வேலை கிடைச்சதும் உங்கப்பா உங்க சாதியிலே ஒரு பெரிய இடத்துப் பெண்ணா நிச்சயிச்சாருன்னா என்ன செய்வீங்க? நீங்கதான் அப்பா பிள்ளையாச்சே!” செல்வா, சிறிதுநேரம் கண்களை மூடினான் அந்தக் கண்களில், உள் உருவமாய் அப்பா வந்து நின்றார். ஆண் சரஸ்வதி போன்ற வெள்ளாடைத் தோற்றம். அதிர்ந்து பேசமாட்டார். ஆனால், அவர் பேச்சு அழுத்தமாக இருக்கும். கிராமத்தில் எல்லாத் தந்தைகளும், தம் பிள்ளைகளைத் திட்டும்போது, இவனை அவர் "டா" போட்டு பேசக்கூட யோசிப்பார். அவர் தன்னையோ பிறரையோ திட்டி ஒரு நாளும் கேட்டதில்லை. அப்படிப்பட்ட அப்பா இப்போ.. சொந்தக் கிராமத்துக்கு மானசீகமாய் போய், தந்தையின் தரிசனத்தில் மூழ்கிப் போன செல்வாவை, கவிதா, ஒரு உலுக்கு உலுக்கினாள். அவன் சோகம் அவளுக்குப் புரிந்தது பேச்சை மாற்றுவதற்காக அவன் இடுப்பில் கைபோட்டுக் கொண்டு கேட்டாள். "ஆமா. ஒங்கப்பா, அந்தக் காலத்துல கிராமத்துல ஆண்கள்ல பெண்கள்ல பலரை காதலிக்க செய்ததாய் திருக்குறள் மாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/138&oldid=762192" இலிருந்து மீள்விக்கப்பட்டது