பக்கம்:ஒத்தை வீடு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 139 சொன்னிங்களே. இந்த 'அதுக்கு ஒரு குறளோவியம் கொடுக்கிறீங்களா.." செல்வா, மீண்டும் கடற்கரைக்கு வந்தான். தந்தையின் தரிசனத்தை அரைகுறையாய் விட்ட அதிருப்தியோடு அவளைப் பார்த்தான். அவள் சொல்லுங்க என்று அவன் முடியை பிடித்து இழுத்தபோது, இவன் மூளைக்குள் பதிவான அப்பாவின் பேச்சு இவன் பேச்சானது. "அந்தக் காலத்துல, அதாவது அறுபது வருஷத்திற்கு முன்னால, கிராமங்களில் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால எல்லா வகையிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டதாம். குறிப்பா கலைஞரோட "பராசக்தி", "மனோகரா" வசனங்கள், ஒரு உலுக்கு உலுக்கியதாம். "பராசக்தி” நாடகங்களை போடாத கிராமங்களே கிடையாதாம். அதுக்கு முந்தன காலத்துல, கல்யாணமான கணவன் மனைவி, ஒருவாரம் வரைக்கும் நாணிக்கோணி, அப்புறந்தான் படுக்கையை பகிர்ந்து கொள்வார்களாம். அப்புறம் காய்ஞ்ச மாடு கம்பம் புல்ல மேய்ஞ்ச கதையாம். கல்யாணமான பதினோறாவது மாசத்திலே ஒன்பதாவது மாசம் வந்திடுமாம். கம்மாக்கரைவரை தோள்மேல கைபோட்டு, கையோடு கைசேர்த்து, பேசிக்கிட்டே போகிற இந்தத் தம்பதி, ஊருக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில், புருஷன்காரன் முன்னால நடப்பானாம். பெண்டாட்டியானவள் அவன் யாரோ தான் யாரோ என்பதுமாதிரி, அரை கிலோமீட்டர் பின்னால நடப்பாளாம். இதை எங்கப்பா ஒரு உதாரணமா சொன்னாரு. எங்கப்பாவோட குட்டாம்பட்டி வாத்தியாருக்கும், வெட்டாம்பட்டி வாத்தியாரம்மாவுக்கும் கல்யாணம் கல்யாணம் முடிந்த ஒரு மணி நேரத்துல அந்த வாத்தியாரம்மா புருஷனாகிப் போன வாத்தியாருக்கு நாலுபேரு முன்னால காபி டம்ளரை நீட்டினாளாம். "சூடு ஆறு முன்னால குடிங்கன்னு" சொன்னாளாம். அவ்வளவு தான். ரெண்டு படிடி வாய்களுக்கும் அவல் கிடைச்சது மாதிரியாம். இப்படி ஒரு பொம்பள இருப்பாளா?ன்னு ரெண்டு ஊர்க் காரர்களும் ரெண்டு மாசம் வரைக்கும் சிரிப்பா சிரிச்சாங்களாம்." "அப்போ உங்கப்பாவும் அம்மாவும் காதலித்து, கல்யாணம் பண்ணினாங்க என்கிறதா நீங்க சொன்னது பொய்தானே?" "பொய் இல்ல கவி! நிசம்தான் எங்கம்மாவும் அப்பாவும் அந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை அதாவது கலைஞரோட வசனக்கால தலைமுறை. எங்கப்பா, எட்டாவது படிக்கும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/139&oldid=762193" இலிருந்து மீள்விக்கப்பட்டது