பக்கம்:ஒத்தை வீடு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 141 அவங்க பேரில எழுதிக் கொடுத்திருக்கிறார். இதுல எல்லாப் பெண்களுமே விழுந்துட்டாளுகளாம். ஒரு ஸ்டேஜ்ல, அதாவது எங்கப்பாவுக்கு பதினெட்டு வயசு வந்தபோது, நாம ஏன் இப்படி ஒரு லெட்டர் எழுதி ஒரு பெண்ணுக்கு கொடுக்கக்கூடாதுன்னு ஒரு நினைப்பு வந்துட்டுதாம். இதுக்காக சிறப்புக் காதல் கடிதம் எழுதியிருக்கார். இந்த லெட்டரில் விழுந்தவள்தான் எனது அம்மா. இன்னும் எழுந்திருக்கல. எங்கப்பா, அவ்வளவு பெரிய உள்ளூர் மேதை. கிராமத்திலேயே அந்தக் காலத்துலயே எஸ்.எஸ்.எல்.சி பாஸ்ான முதல் படிப்பாளி. மற்றவங்க அதைத் தாண்டல. அதோட பொது அறிவுப் புத்தகங்கள நிறையப் படிப்பாரு. வீட்ல் இந்து பத்திரிகையத்தான் வாங்குவாரு... அந்தக் காலத்து வில்லுப் பாட்டாளிகளுக்கு சில சமயம் இவரே பாட்டு எழுதிக் கொடுப்பாரு... நாடகங்களுக்கு கதை வசனம் எழுதி அரங்கேற்றினவரு. லேசுப்பட்டவரு இல்ல." "எப்பாடி சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாச்சு. போகட்டும். உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி. புலிக்கு பிறந்தது எதுவாய் இருக்கும் “என்ன பைத்தியக்காரத்தனமாக கேள்வி. புலியாத்தான் இருக்கும்." "அதனால வர்ணனைப் புலியான லட்சுமணன் என்கிறவருக்கு பிறந்த செல்வா என்கிற நீங்க, உங்க பேருக்கு ஏத்தாப்போல, என்னை வர்ணித்து ஒரு புதுக்கவிதை எழுதி இதே இந்த இடத்துல அடுத்த வாரம் வாசித்துக்காட்டணும். இல்லாட்டி நீங்க வரவேண்டியதில்ல. சரியா?” "சரியில்லம்மா. பள்ளிக்கூடத்துல நேர் நேர் புளிமா என்று தமிழாசிரியர் சொல்லும்போது, இதை ஏன் “மடையா" என்று சொல்லக்கூடாது சார் என்று கிண்டலடித்தவன் நான் தமிழ்ல தட்டுத் தடுமாறித்தான் தேறினேன். என்னை விட்டுடும்மா” "புளிமா என்கிற வார்த்தைக்கு இணையாக ஒரு வார்த்தையை கண்டுபிடித்தலிருந்தே உங்களிடம் இலக்கிய ஆர்வம் இருபபது தெரிகிறது. அதனால நீங்க எனக்கு புதுக்கவிதையில ஒரு அன்பளிப்பு கொடுக்கணும்.” "எனக்கு மேடைப்பேச்சுதான் வரும். கவிதை வராதும்மா "ஒரு துறையில கொடி கட்டிப் பறக்கறவங்களால மற்ற துறையிலும் பிரகாசிக்க முடியும் காரணம் இது ஒரு வகையான சக்தி, இந்த சக்தியை அழிக்க முடியாது. மாற்றிக் காட்ட முடிவிடில் கமான்! உங்கள் கல்லூரி மேடைப் பேச்சுத் திறனை ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/141&oldid=762196" இலிருந்து மீள்விக்கப்பட்டது