பக்கம்:ஒத்தை வீடு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 143 ஏற்ற உள்ளடக்கம் இல்லை. உள்ளடக்கத்திற்கு ஏற்ற உருவம் இல்லை உலகத்தில் உள்ள அத்தனை கவிஞர்களையும் திட்டினான். அவள் கேட்டபடி, ஒரு கவிதை எழுத முடியவில்லை என்றால், தன்னுடைய மரியாதை கடற்கரை காற்றோடு கலந்து போய்விடுமே என்று கலங்கினான் இப்ப மட்டும் தனது மரியாதை சித்தியிடம் என்ன வாழ்கிறதாம் என்று நினைத்துக் கொண்டான். ஒருவேளை கவிதையோடு போகவில்லை என்றால், தனக்கு இருக்கக்கூடிய ஒரே ஆதரவான கவிதா தன்னை நிராகரித்து விடுவாளோ என்று கலங்கினான். ஒருவேளை அப்படி நிராகரிப்பதற்குத்தான் பெரிய இடத்துப் பெண்ணான அவள் தன்னை கவிதை எழுதும்படி சதி செய்கிறாளோ என்றும் அளவுக்கு மீறி சிந்தித்தான். சித்தப்பா இருக்கும்போது, சித்திதான் காபி போடுவாள் அவர் இல்லாதபோது, இவன் போட வேண்டும். காபியோடு சித்தியை எழுப்பவேண்டும். அதுவும் ஏழேகால் மணிக்கு, குழந்தைகளுக்கோ ஆறுமணிக்கெல்லாம் காபி தேவை. ஆகையால் புதுக்கவிதையை விட்டுவிட்டு, குளியலறைக்குப் போய் அத்தனை காரியங்களையும் முடித்துவிட்டு, வெளியே வந்தபோது மணி ஐந்தரை அவசர அவசரமாக சமையல் அறைக்குள் ஒடினான். கேஸ் சிலிண்டரை பற்ற வைத்தான். பிறகு பால் வாங்க மறந்து போய்விட்டோமே என்று அடுப்பை அனைத்து விட்டு, ஒரே ஒட்டமாய் ஓடினான். புதுக்கவிதையையும் இப்போது பழைய கவிதையையும் சேர்த்து திட்டிக்கொண்டே ஓடினான். ஆவின் பூத்திற்குள் போய் இரண்டு பால் உறைகளை கையில் எடுத்துக்கொண்டு வந்தபோது, அவை அவன் கையை உருக வைத்த்ன கவிதை நினைவிலும், கவிதா நினைவிலும், பாலித்தின் பையை கொண்டு போக மறந்து, கையுருக திரும்பி வந்தான் அடுப்பை பற்ற வைத்தபோது, ஆறரை மணி இதற்குள் சித்தப்பா குழந்தைகள் அருணும், சுபேதாவும் "அண்ணா அண்ணா” என்று கூவினார்கள். காபி டம்ளர்களோடு அவர்களைப் பார்த்து அந்த அறைக்குள் ஓடினான். கான்வென்ட் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் என்பதால், பல்லை பிரஷ் செய்யாமலே காபி குடித்து பழகியவர்கள். அருணை முகத்தை கழுவச் சொல்லிவிட்டு, சுபேதாவை தூக்கிக் கொண்டுபோய் முகத்தை கழுவினான். சுபேதாவோ தனது பல் ை காட்டி வாட் கலர் திஸ் என்றாள். உடனே, இவன், "வெள்ளை நிறம்" என்றான். பிறகு, அவள் உதட்டை மடித்துக் காட்டி வாட் ஈஸ் திஸ் கலர் என்றாள். இவன் "சிகப்பு" என்றான் உடனே அந்தக் குழந்தை தனது கவுனை தூக்கிப் பிடித்துக் கொண்டு நோ அண்ணா நோ திஸ் ஈஸ் ஒயிட் திஸ் ஈஸ் பிங்க் என்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/143&oldid=762198" இலிருந்து மீள்விக்கப்பட்டது