பக்கம்:ஒத்தை வீடு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

作马母 புதைமண் படுக்கை அறையிலிருந்து, சித்தியின் பயங்கரமான அலறல் கேட்டது "இங்கிலீஷ்ல பேசற பிள்ளிங்கள கெடுத்துடுவே போலிருக்கே. இதுக்காகவே மாசா மாசம் இந்த பேய்களை, இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல போட்டு மாசம் அறுநூறு ரூபாய் அழுவுறோம். ஏற்கெனவே டாடின்னு சொல்ற பிள்ளைங்கள அப்பாவாக்கிட்டே மம்மியான என்னை அம்மாவாக்கிட்டே. இதுல்லாம் சரிப் படாதுப்பா. தமிழாம் பொல்லாத தமிழு." செல்வா, மனதிற்குள் ஏற்பட்ட வேதனையை அதே விகிதாச்சாரத்தில் அன்பு மயமாக உரக்கக் கேட்டான் "உங்களுக்கு காபி போடட்டுமா சித்தி." "நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறது ஒனக்கு பொறுக்காதே." இதற்குள், அருண் ஒரு விரலையும், சுபேதா இருவிரலையும் காட்டினார்கள். அருணை மேற்கத்திய டாய்லெட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு, சுபேதாவை தனியாக இருந்த இந்திய டாய்லெட்டுக்கு கூட்டிப் போனான். பிறகு, அவர்களை பல்லில் பிரஷ் செய்ய வைத்தான். இரண்டு குழந்தைகளையும் ஒருசேர குளியலறைக்குள் கொண்டு போனான். அருண் தானாகத் குளித்தான். இவன், அவனுக்கு சோப்பை எடுத்து உடலெங்கும் தேய்த்தான். சுபேதா'வை குளிப்பாட்டினான். துணியால் துவட்டினான். இரண்டு பேன்ரயும் வெளியே கொண்டு வந்து, அருணுக்கு வெள்ளை மேல் சட்டையும், நீல கால் சட்டையும் அணிவித்தான். சுபேதாவிற்கு வெள்ளையும் பச்சையும் கலந்த கவுணை அணிவித்தான். சுபேதாவின் தலையை வாரிக் கொண்டிருந்தபோது, சித்தியின் குரல் சிறிது இறங்கியது போல் கேட்டது. "கீசரை போடு. நான் இன்னிக்கி வெந்நீர்ல குளிக்கணும். அப்படியே காபி கொண்டு வா." செல்வா, குழந்தைகளிடம் ஹோம் வொர்க் நோட்டுகளை கொடுத்துவிட்டு, சமையலறைக்குள் ஒடி, காபி தயாரித்தான் அப்போதுதான் வந்த ஐம்பது வயது வேலைக்காரம்மாவிற்கு, சித்தியின் அறையை நோட்டமிட் டபடியே ஒரு கப் காபி கொடுத்தான். இன்னொரு கப்பை சித்தியின் அறைக்கு கொண்டு போனான். சித்தி. சித்தி...' என்றான். அவளோ கட்டில் சுகத்திலிருந்து மீள முடியாமல் வைத்துவிட்டுப் போ என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/144&oldid=762199" இலிருந்து மீள்விக்கப்பட்டது