பக்கம்:ஒத்தை வீடு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 14场 செல்வா, குழந்தைகளும் தானும் இருக்கும் அறைக்கு ஒடி வந்தான். அவர்கள் ஹோம் வொர்க்கை முடிக்க இன்னும் நேரமிருப்பதை அறிந்தான். அந்தச் சமயம் கவிதைக் கற்பனை வந்தது. மீண்டும் நான்கைந்து தாள்களை வைத்துக்கொண்டு, அவனும் கவிதையும் போராடிக் கொண்டிருந்தபோது, சித்தி குளிப்பதற்காக உள்ளே வந்தாள். இவன் பாட்டுக்கு எழுதுவதைப் பார்த்து, மெல்லிய குரலில், அதேசமயம் அழுத்தம் திருத்தமாக ஒரு கேள்வி கேட்டாள். "பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறதை விட்டு விட்டு, என்னத்த எழுதிக்கிட்டு இருக்கே ? முடியாதுன்னா சொல்லிடுப்பா. நான் டியூஷன் வச்சுக்கிடுறேன். நீ வந்ததிலிருந்து குழந்தைங்க மார்க்கும் குறைஞ்சிட்டுது. அதுங்க பேசுற தமிழும் கூடிட்டுது. முடியாதுன்னா சொல்லிடுப்பா ஒனக்கு மாதிரி ஒரு டீச்சருக்கும் தண்டம் போடணும் அவ்வளவுதான்." "இல்ல சித்தி. முன்னைவிட இப்போதான் மார்க் நல்லா வாங்குறாங்க" "பொய் பேச வேற கத்துக்கிட்டியா?" "நிசமாய் சித்தி, நீங்கதான் தப்பா நெனைக்கிறீங்க" "எதிர்த்துவேற பேகlயா?" அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தின் தாத்பரியம் புரியாமலே, அருண், அம்மாவின் இடுப்பில் ஒரு குத்து குத்தினான். அண்ணனைப் போல் பழகத் துடிக்கும் சுபேதாவும் அம்மாவின் பிட்டத்தில் ஒரு குத்து குத்தினாள். சித்திக்காரி கூச்சலிட்டாள். "முட்டாப்பய பிள்ளிகளா. மூதேவிகளா.. அம்மாவை அடிக்கிற அளவுக்கு வந்துட்டிங்களா. ஒங்க பெரியப்பா மகன் உங்களுக்கு நல்லாதான் சொல்லிக் கொடுத்திருக்கான். இன்னும் கத்தியை மட்டும் எடுத்து கையில கொடுக்கல." செல்வா, கோபத்தில் பிள்ளைகளின் காதுகளை திருகினான். உடனே, சித்திக்காரி மீண்டும் கத்தினாள். "என் கண்னு முன்னாலேயே என் பிள்ளைகளை இப்படி பண்lயே. நான் இல்லாட்டால் என்ன பாடுபடுத்துவே.? ஏய் பேய்ப்பய பிள்ளிகளா. இனிமே நீங்க என்கூடத்தான் படுக்கணும்." "போ. மாத்தோம் என்றான் அருண். "அண்ணாகூட த்தான் படுப்பேன்" என்று சுபேதா மழலை மொழியில் பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/145&oldid=762200" இலிருந்து மீள்விக்கப்பட்டது