பக்கம்:ஒத்தை வீடு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 149 'கானல் சதுரத்தின் வேனல் வெளிப்பாடு வேனல் வெளிப்பாடுகளில் கோணல் சரிவுகள் கானலும் சதுரமும் கலந்தவள் கவிதா வினைப்பாலின் திணைப்பயனோ? திணைப்பாலின் வினைப்பயனோ? ஊடகத்தின் பூடகம் பூடகத்தின் ஊடகம் ஊடகமும் பூடகமும் ஒன்றித்த லாகவங்கள்" கவிதா ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் என்று சொன்னபடியே அவன் வாயை பொத்தி, கையை ஈரப்படுத்தினாள். அந்தக் காகித கற்றையில் லயித்துப் போய் வாசித்த செல்வா அவள் கையை விலக்கிக் கொண்டே கேட்டான். "என்ன கவிதா! நான் நல்ல தமிழில் கவிதை படிக்கும்போது, நீ இங்கிலீஷ்ல திட்டுறியே. திட்டுறதா இருந்தாலும் கவிதையில திட்டு.” "ஒங்க கவிதை லட்சணத்துக்கு, திட்டப்படாது. நாக்குல சூடு போடணும். எழுதுற கைய முறிக்கணும்." "இப்படித்தான் எல்லா ஜனரஞ்சக வாசகர்களும் கேட்கிறாங்க. இந்தக் கவிதை, அறிவு ஜீவிகளுக்காக ஒரு அறிவு ஜீவி எழுதிய புதுக்கவிதை." "புரியாததற்குப் பெயர்தான் புதுக்கவிதையர்?" செல்வா, தான் படித்த கட்டுரையின் சில பகுதிகளை தானே சொல்வது போல் ஒப்பித்தான். "எடுத்த எடுப்பிலேயே புரிவது கவிதையல்ல. கவிதையின் நோக்கம் வாசிப்பு சுகம் அல்ல. மூன்று நான்கு தடவை படித்த பிறகுதான், அதன் பொருள் புரியவேண்டும் அப்படித்தான் நான் எழுதியிருக்கேன். ஒரு கவிதையில் வாசிப்பு, மறுவாசிப்பு, அசை போடல், அடிமனத் தேடல், மறு பரிசீலனை, சுய புரிசீலனை, சுயத்தை இழந்த பார்வை, பார்வையை இழந்த சுயம் இப்படி ஆயிரம் இருக்குது. ஒரு மாதம் டைம் கொடுக்கறேன். உனனை அறிவு ஜீவியாய் மாற்றிக் கொள். அப்புறம் இந்தக் கவிதையின் பொருள் புரியும்." கவிதா, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஒருவேளை இவனுக்கு பித்து பிடித்துப் போய்விட்டதோ, இனிமேல் குறுந்தாடி வைக்க வேண்டியதும், ஒரு ஜோல்னா பையை போட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/149&oldid=762204" இலிருந்து மீள்விக்கப்பட்டது