உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாலியல், இனப்பெருக்கம் போன்றவற்றில், நாம் இயற்கையிடம்,
குறிப்பாகத் தாவரங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள
வேண்டும். நமது முழங்கால் உயரத்திற்குச் சுருட்டை இலைகளோடு
கிடக்குதே பிரளிச் செடி அது வண்ணத்துப் பூச்சி, ஆரம்பத்தில்
புழுவாய் இருப்பதுபோல், தரையோடு தரையாய் சின்ன சுருட்டை
முளையாய்த் தோன்றும். இப்படிப் பல முளைகள் சிதறிக் கிடக்கும்.
இந்த முளைகள் எல்லாமே பெண் பாலாய் இருந்தால், இந்த
முளைகளில் ஒன்று வேகவேகமாய் வளர்ந்து, பெண் செடியாகி, ஒருவித
இனமாற்றத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம், தரைக்கு வந்து,
நீரில் கரைந்து, பிற முளைகளில் ஊடுறுவி, அத்தனை பெண்
முளைகளையும், ஆண் செடிகளாக்கி விடும்.

ஒரு ஆல விதை, எப்போது செடியாகி, மரமாகி, விழுதாகி,
பல்கிப் பரவவேண்டும் என்பது, அந்த விதையிலேயே கணிப்பொறி
திட்டங்களாய் உள்ளன. இந்த திட்ட நிகழ்வுகள் நிறைவுபெறுவதற்கு,
அந்த விதையை விதைப்பதும். விதைத்ததை சுற்றி முள் வேலியைப்
போடுவதும், உரமிடுவதும், காடுகளில் தானாகவும், நாடுகளில்
நம்மாலும் நடைபெறுகிறது. இந்த பராமரிப்பு தவறும்போது, இந்த
நிகழ்வுகளுக்குள் தடுமாற்றம் ஏற்படுகிறது.


இதேபோல், ஒரு குழந்தைக்குள் இருக்கும், மனிதனை அல்லது
மனுஷியை - முழுமையாக வெளிக்கொணர, குடும்பத்தளமும்,
சமூகத்தளமும் ஒத்து வராதபோது, அந்தக் குழந்தை, பாலியல் திரிபு
போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடும் மனிதனாகிறது. இவனுக்கு
அல்லது இவளுக்கு பாலியல் மீறல், பழக்கமாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/15&oldid=1836833" இலிருந்து மீள்விக்கப்பட்டது