பக்கம்:ஒத்தை வீடு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 151 என் சந்திப்புக்குப் பிறகு எப்படி ஆனிங்கன்னு யதார்த்தமா, செயற்கைத்தனம் இல்லாமல் கட்டுரை மாதிரி எழுதுங்க... உரைநடையாவது உங்களுக்கு வருதான்னு பார்ப்போம். என்னைப் பற்றி ஒரு வர்ணணைகூட இருக்கக்கூடாது. அதை பதிவு செய்ய கவிஞனோ, எழுத்தாளனோ தேவையில்லை. கண்ணாடி போதும். அதே சயமம், நான் உங்களிடம் ஏற்படுத்திய மாற்றத்தை குறிப்பிடணும்." "இதைத்தான் பல தடவை நேர்லயே சொல்லிவிட்டேனே. இந்த புதுக்கவிதை அனுபவத்திற்குப் பிறகு, ள்.ழுதுறதுன்னா எனக்கு பயமாய் இருக்குதும்மா... இப்பவே நேருக்கு நேராய் சொல்லிடுறேன்." "நாம் கைப்பட ஒரு கதை எழுதுறோம். அது பத்திரிகையில பிரசுரமானால், என்ன சுகம் கிடைக்குமோ, அதைவிட அதிக சுகம் நீங்க கைப்பட எழுதின கடிதத்தில் கிடைக்கும். இதய உணர்வுகளுக்கு உங்க வாய் ஈடாகாது. நீங்கள் எழுதித் தருகிற கடிதத்தை ரகசியமான இடத்தில வச்சு கண்ணுல ஒற்றி ஒற்றி ஒரு நாளைக்கு ஒன்பது தடவையாவது படிப்பேன். அந்த அளவுக்கு நீங்க எழுதுவிங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்குது.” "மொதல்ல நான் உன்னிடம் ஏற்படுத்திய மாற்றத்தை விலாவாரியா நீ எழுதிக் கொடு” "நம்மளால முடியாதுப்பா" "ஏன் முடியாது? உன்னால் முடியும் கவிதா. ஆனாலும் பிற்காலத்துல நம்ம காதல் தோல்வியுற்றால் அந்த லட்டரை வச்சு சினிமாவுல வாறது மாதிரி நான் உன்னை பிளாக் மெயில் செய்வனோன்னு பயப்படுற." "அப்படிப் பயப்பட்டாலும் தப்பில்லியே." செல்வாவிற்கு, என்னவோ போல் இருந்திருக்க வேண்டும். அப்படியே எழுந்தான். தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தான். அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதுவும் வாகன விளக்குகள், விட்டில் பூச்சிகளாய் தெரிந்த கடற்கரைச் சாலையை நோக்கி நடந்தான். கவிதா, தான் சொன்னதன் வலிமையையும், தவறையும் உணர்ந்தவள் போல் அவன் பின்னால் ஓடினாள். சரியாக கண்ணகி சிலைக்குப் பின்பக்கமாக, அவன் சட்டைக் காலரை பிடித்து விட்டாள் சுற்றும் முற்றும் போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்த பெரிசுகள் என்னமோ ஏதோவென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/151&oldid=762207" இலிருந்து மீள்விக்கப்பட்டது