பக்கம்:ஒத்தை வீடு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臀5芷 புதைமண் ன பூந்துவிட்டன போய்க்கொண்டும், வந்து கொண்டும் இயங்கியவர்கள் நின்றார்கள் ஒருசிலர் கவிதா பக்கமாய் போய் நின்று "பொறுக்கிப் பயல்களுக்கு இதுவே பொழைப்பா போச்சு. ஒன்னை என்னம்மா செய்தான்? நடந்ததைச் சொல்லு. அதோ தெரியுதா உங்கள் நண்பன். அதாம் போலீஸ் போஸ்ட். அதுல இவனை ஒப்படைத்திடலாம்” என்று பரிந்துரைத்தார்கள். செல்வா, வெலவெலத்தான். அவன் பற்கள் கூட தானாய் ஆடுவது போல் தோன்றியது. சுற்றி வளைத்த கூட்டத்தைப் பார்த்து கவிதா, கையெடுத்துக் கும்பிட்டபடியே கெஞ்சினாள் "இவன் என்னோட கஸின் பிரதர். எங்க வீட்டுல தங்கித்தான் படிக்கான். வீட்ல ஒரு சண்டை ரெண்டு நாளா ஆளக்காணோம். இங்கே தேடிவந்தால் ஆள் அகப்பட்டான். என்னைப் பார்த்ததும் ஒடுறான்.அவ்வளவுதான். பார் உன்னால. உன்னால எத்தனை பேர் வேடிக்கைப் பார்க்கிறாங்க பாரு..." கவிதா, நிசமாகவே அழுதாள். வேடிக்கை பார்த்த கூட்டத்திற்கு ஒரு விக்கல். அந்தரங்கம் அம்பலம் ஏறியதற்காக ஒரு கேவல். கூட்டத்தில் அப்பாவுக்கு தெரிந்தவர் யாராவது இருக்கலாம். அவ்வளவுதான் ரகளை ஏற்படும். தன் ஒழுக்கத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள் தான் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் கண்டிப்பாக இருப்பார்கள். அப்பா அந்த வகை. இந்த செல்வா, எந்த வகை? கூட்டத்தினர், ஒருவரை ஒருவர் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டார்கள் இந்த "கஸின் சிஸ்டர், கஸின் பிரதர் விவகாரம்" அவர்களுக்கும் அத்துபடி இந்தச் சமயம் பார்த்து, கழிவறை பக்கம் ஒரு அடிதடி, கூட்டம் இவர்களை விட்டுவிட்டு அங்கே ஓடியது. முன்னெச்சரிக்கையாக, பின்வாங்கியும் முன் வாங்கியும் உஷாராக ஒடிப்போய் தங்களுக்கு ஆபத்து ஏற்படாத ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு, இரண்டு பேரின் சொற்போரோடு கூடிய மற்போரை வேடிக்கை பார்த்தது. கவிதாவும் செல்வாவும், ஒருவரோடு ஒருவர் பேசாமல் கண்ணகிச் சிலையிலிருந்து தெற்குப் பக்கமாக பிளாட்பாரத்தில் நடிந்து கொண்டே போனார்கள். அவனுக்கு பின்னால் நடந்த கவிதா பேசிக் கொண்டே நடந்தாள். உங்க பித்துக்குளி தனத்தால நடக்கக்கூடாதது நடந்தது பஈர்த்தீங்களா. சரியான கிராக்கு." "நான் கிராக்கு இல்ல. மானஸ்தன். நான் பிளாக்மெயில் செய்தாலும் செய்யலாமுன்னு உனக்கு ஒரு எண்ணம் வ்ந்தது பாரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/152&oldid=762208" இலிருந்து மீள்விக்கப்பட்டது