பக்கம்:ஒத்தை வீடு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 புதைமண் கெட்டாலும் சரிதான். எங்கப்பா அவனை தண்ணி தெளிச்சு விட்டுட்டாரு பெற்ற கடனுக்காக அவன் கொடுக்கிற ஏச்சையும் பேச்சையும் வாங்கிக்கிட்டு, அதுக்கு பதிலாக அவன் பணம் எடுக்கும்போது சும்மா இருக்காரு. சரி அதை விடுங்க. நாம், இனிமேல் எப்படி சந்திக்கிறது? எங்கே சந்திக்கிறது? இந்தக் கடற்கரையில வெளிச்சத்துல சந்திச்சா தெரிஞ்சவங்க பார்ப்பாங்க. இருட்டுல சந்திச்சா தெரியாதவங்ககிட்ட அகப்படனும்." "அதுதான் எனக்குப் புரியல..." "ஒரு குட் நியூஸ். நாளைக்கு எங்கப்பாவும் அம்மாவும் டுர் போறாங்க. ஆபிஸ் கார்ல போறாங்க. அம்மா என்னையும் கூப்பிடுறாங்க. உங்களை பிரிந்து என்னால இருக்க முடியுமா? அதனால நான் முடியாதுன்னுட்டேன். நல்லவேளை நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. எங்க வீட்டுக்கு வந்துடுங்க." "எனக்கு பயமா இருக்குது கவிதா. ஒருவேளை தப்பித் தவறி யாராவது இருந்தால், ஒங்கண்ணன்கூட இருக்கலாமே." "போன வாரம்தான் மூவாயிரம் ரூபாய் எடுத்துட்டு போனான். இனிமேல், அடுத்த மாசம் ஒண்ணாந் தேதிதான் வருவான். ஒருவேளை எங்கப்பா, நானும் அவரோட போகணுமுன்னு அடம் பிடித்தால், என்னால தட்ட முடியாது. அதனால, நான் மட்டும் வீட்ல இருக்கிறதா இருந்தால் கம்பவுண்டு கதவுல ஒரு பக்கம் திறந்திருக்கும். மூடி இருந்தால், நான் இல்லன்னு அர்த்தம்" "வாட்ச்மேன் இருக்கலாம் இல்லியா?” "அவனையும் கூடமாட ஒத்தாசைக்கு அப்பா கூட்டிட்டுப் போறார்." "கொஞ்சம்கூட பொறுப்பில்லாத அப்பா. அம்மாவை கூட்டிக்கிட்டு ஒன்னை மட்டும் விடலாமா. நீயும் போ." "ஒங்க மனசு கல் மனசு செல்வா. எனக்கு இருக்கிற துடிப்பு உங்களுக்கு இல்ல." 'நீ சொல்லிட்ட. நான் சொல்லல. அவ்வளவுதான் வித்தியாசம்." "சமையல்காரம்மா வீட்டோட இருக்காங்க. அந்தத் தைரியத்துல அப்பா என்னைப் பற்றி கவலைப்படமாட்டார். அதோட, அம்மா - அப்பா விளையாட்டுக்கு நான் இடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு நினைப்பார்." "சமையல்காரம்மா அப்பா வந்ததும் போட்டுக் கொடுத்தால்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/156&oldid=762212" இலிருந்து மீள்விக்கப்பட்டது