பக்கம்:ஒத்தை வீடு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 புதைமண் செய்துவிட்டு தங்களுக்கு என்று ஒதுக்கிய மேற்குப் பக்கத்து அறைக்கு வந்தான். குழந்தைகளை மெத்தைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, அவன் அந்த இருவர்களுக்கிடையே படுத்துக் கொண்டான். அந்த இருவரும் தூங்குவதற்கு உந்துகோலாக ஒவ்வொரு கையாலும் ஒவ்வொருத்தர் தலையையும் கோதி விட்டான். இந்த முடிக்கோதல் ஒரு அலாதி இன்பம். அதுவும் மிகவும் வேண்டியவர்கள் வருடி விடும்போது, அது ஒரு தனித்துவ சுகத்தை கொடுக்கிறது. மகிழ்ச்சித் திரள்கள் ஒன்றாய் திரள்கின்றன. ஆறுதலுக்கு ஆறுதல். நெருக்கத்திற்கு நெருக்கம். உடலெங்கும் சுக மயம் உள்ளமெங்கும் நிர்மலம். இதனால்தான், குரானில் ஒருவரின் துக்கத்தை குறைப்பதற்கு அவரது பிடரியை தடவி விட வேண்டும் என்று விஞ்ஞான பூர்வமாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விஞ்ஞானம், அந்த இரு குழந்தைகளிடமும் எடுபடவில்லை. அவன் கை இரண்டையும் பிடித்துக் கொண்டு 'கதை சொல்லுங்க அண்ணா என்றன. சுபேதா பஞ்ச தந்திரக்கதை வேண்டும் என்பது மாதிரி கேட்டாள். அருண் சக்திமான் டைப்பில் கதை கேட்டான். இந்தப் போட்டியில் இரண்டு குழந்தைகளும் அண்ணன் மார்புக்குமேல் பாய்ந்து ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டன. அருணை முறைத்துக் கொண்டும், சுபேதாவின் கண்ணிரை துடைத்துக் கொண்டும் அவர்கள் இருவரையும் தன் மார்பில் தலைசாய்க்க செய்து முதுகைத் தட்டிக் கொடுத்தான். குழந்தைகள் துங்கி விட்டன. செல்வா, மெல்ல அவர்களின் தலைகளை படுக்கைக்கு இறக்கி, அவர்கள் விழிக்கிறார்களா என்று நோட்டம் போட்டான். அண்ணா என்ற குரல் எழுப்பி குழந்தைகள் தன்னை காணாமல் அலறி விடக்கூடாதே என்ற அச்சம். மணியை பார்த்தான். சரியாக பிற்பகல் ஒன்று. உடனே அணிச்சையாக ஆவின் நினைவு வந்தது. பால் கார்டை எடுத்துக் கொண்டு, சமையலறையிலிருந்த பிளாஸ்டிக் கூடையையும் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். சித்தி விழிப்பதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதும், ஆவின்காரன் பிற்பகல் மூன்று மணிவரை இருப்பான் என்பதும் அவனுக்கு ஆறுதல் கொடுத்தது. செல்வா, தெருவுக்கு வந்து, அடுத்த வீட்டை தாண்டி, அதற்கு அடுத்த வீட்டின் கேட்டை நெருங்க நெருங்க இதயமும் மூளையும் ஒன்றை ஒன்று நெருக்கிக் கொண்டன. கால்கள், பின்னியபடியே நடந்தன. மனம் "போ” என்றும் மூளை "போகாதே" என்றும் மாறி மாறி ஆணையிட்டன. இன்றைக்கு மட்டும்தான் என்று மூளைக்குச் சொன்னான் இன்றைக்கு பேச வேண்டியதையெல்லாம் பேசிவிடுவோம் என்று மனதிற்குச் சொன்னான். இந்த மனதிற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/158&oldid=762214" இலிருந்து மீள்விக்கப்பட்டது