பக்கம்:ஒத்தை வீடு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 163 "இது ஒருதலைக் காதல் ஸார். கவிதா என்கிட்ட பேசினதே கிடையாது ஸார்." "அத, ஒன் லெட்டரைப் பார்த்து தெரிஞ்சுக்கிடுறேன். அப்புறம் ஒன்னை போக விடுறேன். ஏன்னா. கொலை மிரட்டல் மாதிரி எதுவும் எழுதியிருக்கப்படாது பாரு. சரி. கொடு." செல்வாவின் உடல் வேர்வையில் நனைந்தது. தலை சுற்றியது. ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டு, தரைக்கு வராமல் தவிப்பதுபோல் இருந்தது. தயங்கித் தயங்கி ஆவின் கார்டையும் கவிதாவிற்கு எழுதிய கடிதத்தையும் கை நடுங்க, கால் ஒடுங்க மோகனனிடம் கொடுத்தான் அவனோ ஆவின் கார்டை பின் அட்டைபோல் வைத்துக் கொண்டு அந்தக் கடிதத்தை மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டு, பிறகு கண்ணுரன்றி படித்தான். "என் இனிய சுமை தாங்கியே!” “வணக்கம். வணக்கமம்மா. நீ கடற்கரையில் ஆணையிட்டதால் மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. எனக்கு ஏற்பட்ட ஆசையாலும், இதை எழுதுகிறேன். இதை வாசிக்க வாசிக்க, நீ மகிழ்ந்தால் நானும் மகிழ்வேன். ஆனாலும், இந்தக் கடிதம் உன்னை அழ வைக்குமோ என்று அஞ்சுகிறேன். ஒருவர் மனதில் இருப்பதை அப்படியே எழுதினால் பிரச்சினையில் பாதி குறையும் என்பார்கள்." "எனக்கு காலில் முள் குத்தினால் உனக்குக் கண் வலிக்கும். இதே போல்தான் எனக்கும். மன அலையோ... உள்ளுணர்வோ... முற்பிறவியோ ஏதோ ஒன்று நம் இருவரையும் இனிமையாக கட்டிப் போட்டிருக்கிறது. அது மலையையும் பாதாளத்தையும் இணைக்கும் ஏதோ ஒரு காதல் சங்கிலி. இந்தச் சங்கிலியிலிருந்து நீ கீழே இறங்கக் கூடாது. நான்தான் மேலே ஏறி வரவேண்டும். பி.எஸ்.ஸி முடித்ததும் வேலையில் சேர்ந்தபடியே நிச்சயம் எம்எஸ் ஸி. படித்து ஐ.ஏ.எஸ். எழுதி உன்னை கைப்பிடிப்பேன் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. எல்லாம் அடியேனின் உழைப்பில் எழும் ஆண்டவன் சித்தம்." "உன்னை நான் சுமைதாங்கி என்று அழைத்தற்கு, வேறு ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால் கொச்சையான பொருளில் எடுத்துக் கொள்வாள். ஆனால், நீயோ அசாதாரணமான பெண். தாய்மையின் உருவம். எல்லோர் மீதும் படரும் உன் தாய்மை, எனக்கு மட்டும் காதலாக கவிழ்ந்தது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், நீ எல்லோருக்கும் தாய் மாதிரியான அமைதியும் அன்பும் ஊடாடும் மெளனப் பார்வைக்காரி என்னைத் தவிர்த்து, மற்றவர்களிடம் நிதானமாக உதடு அசைத்து, மெல்லவும், அதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/163&oldid=762220" இலிருந்து மீள்விக்கப்பட்டது