பக்கம்:ஒத்தை வீடு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

誓BB புதைமண் சீட்டுப் பணத்தையும் அவர் தந்தாக வேண்டுமென்று அரிவாள் கம்போடு வந்தார்கள். அத்தைமார்களோ, உதவப் போன கணவன் மார்களை ஏலத்தில் குரல் எழும்புவது போல் திட்டித் தீர்த்தார்கள். எனக்கு ஒரு புதிராகவே இருக்கிறது கவிதா. பொதுவாக வறுமைப்பட்ட ஒரு குடும்பத்தில் அனைவரையும் கரையேற்றும் மூத்த அண்ணன் அல்லது மூத்த சகோதரி கடைசியில் அதே குடும்பத்தாரால் உதாசீனப்படுத்தப்படுகிறார். இது எங்கப்பாவுக்கு மட்டும் நேருவது அல்ல. பலருக்கு நடந்திருக்கிறது. சமூக இயல் நிபுணர்களும், மனோதத்துவ நிபுணர்களும்தான் இத்தகைய உதாசீனத்திற்கு காரணங்கள் கூறவேண்டும். சரி விஷயத்திற்கு வருகிறேன்." 'என் தந்தையிடம் மஞ்சள் கடிதாசு கொடுக்கும்படி சண்டைக்கு வந்த சாதிக்காரர்களே ஆலோசனை சொன்னார்கள். ஆனாலும் என் தந்தை கொஞ்ச நஞ்சமிருந்த சொத்தையும் அம்மாவின் நகைகளையும் விற்று, அத்தனை பேருக்கும் கட்டிய பணத்தை திருப்பிக் கொடுத்தார். இப்போது ஒரு சின்னப் பெட்டிக் கடை வைத்திருக்கிறார். ஆனாலும் அவரது குனிந்த தலை குனிந்தபடியே இருக்கிறது. அந்த தலையை நிமிர்த்துவதுதான் என் முதல் பணி. இரண்டாவதுதான் நீ இதை நீ தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. காரணம் மூன்றாவதுதான் நான்." “ஊருக்கு வந்த பிறகுதான், சித்தப்பாவுக்கும் சித்திக்கும் விவகாரமே தெரியும். மாதச் சம்பளக்காரரான சித்தப்பாவாலும் ஏதும் பெரிதாய் உதவ முடியவில்லை. தனது பங்குக்கு உரிய சொத்தையும் விற்கும்படி சொன்ன சித்தப்பாவை, அப்பா கண்ணிர் மல்கி கட்டித் தழுவி அழுதார். ஆனால், மறுத்துவிட்டார். அப்பா அழுவதை அப்போதுதான் பார்த்தேன். ஒரு தாய் மக்கள், பங்காளிகளாக மாறும்போது எனது தந்தையும் சித்தப்பாவும் ராம லட்சுமணர்கள். ராமரும், லட்சுமணரும், வெவ்வேறு தாய்க்கு பிறந்தவர்கள். ஆகையால், அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிந்தது. ஆனால், ஒருதாய் மக்கள் என்றைக்குமே ஒற்றுமையாக இருந்ததில்லை. இதற்கு விதிவிலக்கு என்னுடைய அப்பா-சித்தப்பா. பிளஸ் டு முடித்த என்னை கல்லூரியில் படிக்க வைப்பதாக சித்தப்பா அப்பாவிடம் கேட்டுக் கொண்டார் அதுவும் அழுதபடியே கேட்டார். சொத்து என்று வந்தபோது அழுது மறுத்த அப்பா, எனது படிப்பு என்று வந்தபோது 'உன் பிள்ளை எடுத்துக்கோ என்றார். சித்தியும், "நீ, நான் பெறாமல் பெற்ற பிள்ளை" என்றாள். இந்த சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. சித்திக்கு நம்பிக்கையான ஒரு வேலைக்காரன் வேண்டும் என்று. பால் கொடுக்கும் மாட்டை பல்லை பிடித்து பார்க்கக்கூடாதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/166&oldid=762223" இலிருந்து மீள்விக்கப்பட்டது