பக்கம்:ஒத்தை வீடு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 167 ஆனாலும், உன்னிடம் மட்டுமே இதை தெரிவித்தேன். தெரிவிக்கிறேன். " "இன்று, உன் வீட்டில், நான் உன்னை சந்திப்பது இதுவே முதலாவதாகவும் கடைசியாகவும் இருக்க வேண்டும். அதேசமயம், புனைப் பெயர்களில், நீ, என் கல்லூரி முகவரிக்கும், நான் உன் பள்ளி முகவரிக்கும் கடிதம் எழுதிக் கொள்வோம். உன் பெயர் கவியரசன். என் பெயர் செல்வி. நான் நம் இருவருக்கும் சூட்டியிருக்கும் பெயர்களின் பொருள் புரிகிறதா மக்கே காதல் என்று வரும்போது காதலன் காதலியாகிறான். காதலி காதலனாகிறாள்." "உன் அண்ணன் மோகனனைப் பற்றி அதிகமா நீ அலட்டிக்க வேண்டாம். அவரை வெறுக்கவும் வேண்டாம். எனக்கு என்னமோ, அவர் நல்லவர் போலவே படுகிறது. நீயும், உன் தந்தையும் கெளரவத்தை பார்க்காமல் அவரிடம் கனிவாக பேசினால் அவரும் கனிந்து விடுவார். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த விவகாரத்தை நான் எழுப்புவது உனக்கு எரிச்சலை கொடுக்கலாம். ஆனால், என் மைத்துனர் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? இப்படிக்கு முத்தங்களுடன், செல்வா. மோகனன், கடிதத்தின் முன்னுரையை படித்துவிட்டு கண் கலங்கினான். கழித்த புருவங்கள் இறங்கின. செல்வாவை பாசத்தோடு பார்த்தான். கொடுமைக்குள்ளாகும் பெரிய இடத்துப் பெண்களுக்கு திரெளபதி வேடம் போடுகிறவன்மீது ஒன்றிப்பு ஏற்படுவதுபோல, இவனுக்கும் செல்வாவிடம் ஒரு ஒன்றிப்பு ஏற்பட்டது. ஆனால், செல்வாவோ "என்னை விட்டுடுங்க ஸார். வேணுமுன்னால் அடியுங்க ஸார். இப்படி எழுதுனது தப்புதான் ஸார். இதை மட்டும் நீங்க என் சித்தப்பா கிட்டயோ, சித்தி கிட்டயோ சொன்னால், என் படிப்பு கெடும். அதைப் பற்றிக்கூட நான் கவலைப்படல ஸார். ஆனால், சித்தப்பா, நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டனேன்னு என்னைப் பார்க்கிற பார்வையையோ, என் பெற்றோர் தலைகள் மேலும் தாழ்வதையோ பார்த்துகிட்டு நான் உயிரோட இருக்கமாட்டேன் ஸார். நீங்கதான் ஸார் என்னை காப்பாத்தணும்." எதிர்பாராத விதமாக, செல்வா, மோகனனின் காலில் விழுந்தான். அந்தக் காலை கட்டிக்கொண்டே தலையை முட்டினான், மோதினான். மோகனனும், எந்தவித விகறபமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/167&oldid=762224" இலிருந்து மீள்விக்கப்பட்டது