பக்கம்:ஒத்தை வீடு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 புதைமண் சிலர் வாயால் கேட்டார்கள். அந்தத் தெரு வாசிகளுக்கு செல்வா மிகவும் பிடித்துப் போன பையன். அவர்களுக்கு அவசர அவசரமாக விளக்கமளித்துக் கொண்டே சித்தப்பாக்காரர், அந்த அரண்மனை வீட்டுப் பக்கம் வந்தபோது, ஒரு இண்டிகா கார் வெளிப்பட்டது. அவர்கள் அருகே நின்றது. மோகனன் கேட்டான். "எங்க போlங்க அங்கிள்?" 'என்ன மோகனனா! ஒன்னை ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கொரு தடவைதான் பார்க்க முடியுது. இன்னிக்கு நிச்சயம் மழை வரும்” "அப்போவும் புழல் ஏரி பெருகாமல், நம்மை சிரமப்படுத்தும். இவனோட எங்க அங்கிள் போlங்க.." "இவனுக்கு சாப்பாட்டை, நினைத்தாலே வாந்தி வருதாம். அதனால மஞ்சள் காமாலையான்னு கண்டுபிடிக்க டாக்டர்கிட்ட போறேன்." "நல்லவேளை என்கிட்ட சொன்னிங்க அங்கிள்! எனக்கும் சாப்பாட்ட நினைத்தால் குமட்டுது. இதனால எங்க பேமிலி டாக்டருக்கு போன் செய்தேன். சென்னையில மெட்ராஸ் ஐ மாதிரி, இது ஒரு விதமான வயிற்று நோயாம். நிறைய பேருக்கு வந்திருக்காம். ஆனால், மஞ்சள் காமாலை போல, நாற்பது நாள் தங்காமல் ஒரு ஊசியோட போயிடுமாம். நானும், இப்ப டாக்டர்கிட்ட போறேன். இவனையும் வேணுமுன்னா கூட்டிட்டுப் போறேன். உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். டேட்ாண்ட் ஒர்ரி இவனை என்கிட்ட ஒப்படைச்சுடுங்க. மாமுலாயிடுவான்." செல்வா, மிரண்டான். அரண்டான். மோகனன் அவனை தானாக காரில் ஏறிக் கொள்ளும்படி பேசினான் "சும்மா சொல்லப்படாது அங்கிள். உங்கப் பையன் ரொம்பவும் நல்லவன். ஒரு தடவை அவன் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தேன். முத்து முத்தான கையெழுத்து. மனகல எந்த கல்மிஷமும் இல்லாதவங்களுக்குத்தான், எழுத்துக்கள் அச்சடிச்சது மாதிரி வருமாம்.” 'டி.டி.பி. போட்டது மாதிரின்னு சொல்லு என்னோட எழுத்தும் முத்து முத்தாத்தான் இருக்கும்" 'நீங்களும் கல்மிஷம், இல்லாத மனிதர் தானே. ஒங்க இலாகாவிலேயே கை நீளாத ஒரே ஊழியர் நீங்கதானே. ஆனால், ஒங்களுக்கும் சேர்த்து எங்கப்பன் கொள்ளை அடிக்கான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/176&oldid=762234" இலிருந்து மீள்விக்கப்பட்டது