பக்கம்:ஒத்தை வீடு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 புதைமண் அதிகாரி. அவர் சம்பளத்துக்கு ஆசைப்பட்டோ அல்லது அவளுக்கு ஆசப்பட்டோ, இல்லன்னா எங்கம்மா கூட்டிகிட்டு போனவனை பழி வாங்கிறதுக்காகவோ, இவனும் அவளை சேர்த்துக்கிட்டான். ரெண்டு பேருக்கும் ஒரே குடி, ஏச்சு பேச்சு. எப்படியோ எல்லா ஐ.ஏ.எஸ். பிள்ளைகளையும் போல, நல்லா இருக்க வேண்டிய நான், குறைந்த பட்சம் நாட்டியத்தில் இரண்டாவது தனஞ்செயனாக உலகம் முழுவதும் சுற்ற வேண்டிய நான், இப்போ ஒவ்வொரு பயல்கள் பின்னாலயும் சுற்றிக்கிட்டு இருக்கேன்" "அய்யோ. இதுக்கு மேல சொல்லாதப்பா.. என்னால தாங்க முடியாதுப்பா." "என்னை நீ இனிமேல் பகிர வேண்டாம். என் பாரத்தையாவது பகிர்ந்து கொள். எவளுக்கும், ரெண்டு பிள்ள பிறந்த பிறகும், கணவனை டைவர்ஸ் பண்றதுக்கு உரிமை உண்டுதான். ஆனால், அதுக்கு முன்னால பிள்ளைகளை பற்றி ரெண்டு பேரும் ஒரு செட்டில்மெண்டுக்கு வரணும். இப்படி இல்லாமல் பிள்ளை களுடைய எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல், ஒரு தாய், ஒடிப் போகிறாள் என்றால், அவள் அசல் தேவடியாளத்தான் இருக்கணும். காரணம், பெண்மை என்பதே தாய்மை. அந்தத் தாய்மைக்கு மிஞ்சி ஒருத்திக்கு திமிர் - செக்ஸ் திமிர் ஏற்பட்டால், அவள் பெண்ணே இல்ல. இப்படி ஒடிப்போனவளுக்கு நானும் கவிதாவும் பிறந்தது நிசம். ஆனால், அம்மா என்கிறவள் எங்கள இந்த லஞ்சப் பேர்வழி வேணுகோபாலுக்கு பெத்தாளோ, இல்ல வேறு யாருக்காவது பெத்தாளோ.." "அப்படி இருக்க முடியாது. உங்கப்பா சாயல்தான் ஒனக்கும், கவிதாவுக்கும் இருக்குது." "அப்படி இருந்தால் வெட்கப்படுறேன். டுப்ளிகேட் அம்மாவ, கவிதாவால ஏற்க முடிஞ்சுது. ஆனால், என்னால முடியல. எங்கப்பன் லஞ்ச வாங்குறதுல சமர்த்தன். இவளும் பணம் வாங்குறதுல ஒரு பழைய பெருச்சாளி இயல்பிலேயே நேர்மை யானவன் நான். எங்கப்பன நினைத்தாலே, ஒனக்கு குமட்டுறது மாதிரி எனக்கும் குமட்டுது. வேலை போட்டு தருகிறேன் என்கிற வாக்குறுதியை நம்பி வந்தவள்கள், அலுவலக சகாக்களை பழி வாங்குவதற்காக இவனோடு படித்தவள்கள் - எல்லாம், எங்க கண் முன்னாலேயே நடந்தது. இந்த லட்சணத்துல எங்களுக்கு ஒழுக்கத்தின் உயர்வு பற்றி போதிப்பான் இந்த யோக்கியன்." "எனக்கு டூப்ளிகேட் அம்மாவை ஏற்றுக்க முடியல. அந்தச் சமயத்துல திரைப்படங்களுல எக்ஸ்ட்ரா வேடம் கிடைச்சுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/180&oldid=762239" இலிருந்து மீள்விக்கப்பட்டது