பக்கம்:ஒத்தை வீடு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 181 பெரிய பெரிய கதாநாயகர்களெல்லாம் டான்ஸ் ஆடுறது மாதிரி காட்டுவாங்களே அது குளோசப்பாக இருக்கும். லாங் ஷாட்ல ஆடுறது என்னை மாதிரி டூப்ளிகேட்கள்தான். அவங்களுக்கு லட்ச லட்சமா பணம். எங்களுக்கு நாயே பேயேன்னு திட்டு. இந்தச் சமயத்துல, தமிழ் திரைப்படக் காட்சிய பார்க்க வந்த ஒரு ஐரோப்பியருக்கு, என்னை ரொம்ப பிடித்துப் போச்சு. நல்ல டிரெஸ் வாங்கிக் கொடுத்தார். நல்ல சாப்பாடு போட்டார். நல்ல படுக்கையில போட்டார். அதுவும் ஸ்டார் ஒட்டல்ல. அப்போ அவ்னோட ஏற்பட்ட சேர்க்கையை நான் தட்ட நினைத்தாலும் முடியல. ஒன்னை மாதிரிதான் வாந்தி எடுத்தேன். அப்புறம் அதுவே ஒரு டேஸ்ட்டாயிட்டுது. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விதமான பையன் தேவைப்படுது, தேவைப்படுறேன். அப்போ பிடித்த இந்த ஒரினச் சேர்க்கை, இப்போ ஒரு போதை மாதிரி ஆயிட்டுது. என் தங்கையின் எதிர்கால கணவனுக்கு, என்னை மாதிரி ஒரு நிலமை ஆகிவிடக் கூடாதுன்னுதான், ஒனக்கு இதைச் சொல்றேன்." “கவிதா, ஒங்கம்மாவைப் பற்றி என்கிட்ட ஒருவார்த்தை சொல்லுலியே." "பாவம் அவள். நான், என் அம்மாவை ஒரு தாசியாக நினைத்து ஒதுக்கிட்டேன் ஒதுங்கிட்டேன். அவளுக்கோ ரெண்டு அம்மாக்கள். ஒடிப்போன அம்மாவை சொல்வாளா? ஓடிவந்த அம்மாவைச் சொல்வாளா? நல்லவேளை, ஒன்னோட காதல் அவளுக்கு கிடைத்திருக்கு. இல்லன்னா என்னை மாதிரி அவள் சீரழிந்திருப்பாள். லிம்போ மேனியாக்கா, அதாவது ஒரு நாளைக்கு ஒருத்தன தேடுறவளாய் ஆகியிருப்பாள். இல்லன்னா லெஸ்பியனா மாறியிருப்பாள்." "யாரைச் சொன்னாலும் கவிதாவைச் சொல்லாதே." "ஒன்னைவிட அனுபவத்திலும் வயதுலும் பெரியவன் என்கிற முறையில நான் சொல்றதை கேளு. ஒரு காதலுலயோ அல்லது காமத்திலேயோ செக்ஸ் என்கிறது கால்வாசிதான். முக்கால்வாசி உள்ளத்தால்' ஒன்றுபடுதல். அதேசமயம், தம்பதிகளுக்குள்ளே செக்ஸுவல் அட்ஜெஸ்மெண்ட் இருக்க வேண்டும். இல்லை யானால், புருஷன் கொடுமைக்கார்ன்ாவான். மனைவி பத்தினியா வாழ நினைத்தால் ஸ்டீரியாவுல தவிப்பாள். இல்லாட்டால், பலரோட படுப்பாள். இப்படி படுப்பதுகூட செக்ஸ் அல்ல. கணவனின் இயலாமைக்கு அல்லது அவனது கொடுமைக்கு அல்லது அவன் பிற பெண்களோடு உறவாடுவதற்கு காட்டுகிற எதிர்ப்பே இந்த கள்ள உறவின் முதல்படி அல்ல செக்ஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/181&oldid=762240" இலிருந்து மீள்விக்கப்பட்டது