பக்கம்:ஒத்தை வீடு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 புதைமண் இரண்டாம் படிதான். ஆக மொத்தத்துல பலரோடு படுக்கைகளை பகிர்ந்து கொள்வதும், ஒரினச் சேர்க்கையும், ஒரு நோயின் அறிகுறியே தவிர நோய் அல்ல." "உங்க கதையை கேட்கிறதுக்கு மனசுக்கு சங்கடமா இருக்குது. ஆனாலும், ஆயிரம் சங்கடங்கள் வந்தாலும், அதனால ஒழுக்கச் சிதைவு ஏற்படக்கூடாது." "முதல்ல எது ஒழுக்கம்? எது சிதைவு? இதை தீர்மானிக்கவே பல பட்டி மன்றங்கள் நடத்தணும். இந்திரனால் கற்பழிக்கப்பட்ட அகலிகையையும், நளாயினியாய் இருக்கும்போது தனக்கு ஐந்து கணவர்கள் வேண்டுமென்று கேட்டு, மறுபிறவியில் நெருப்பில் பிறந்த திரெளபதியையும், ராவணன் படத்தை வரைந்த சீதையையும், சுக்ரீவனோடு கூடிக்குலாவிய வாலியின் மனைவியான தாராவையும், கணவன் போக்கு தவறென்று நினைத்த மண்டோதரியையும் பஞ்ச பத்தினிகள் என்று நமது புராணங்கள் கூறுகின்றன முதலில் இதற்கு பதில் சொல். கற்பு என்பது என்ன? ஒழுக்கம் என்பது என்ன? இந்த ஐந்து பெண்களின் அடிப்படையில் பதில் சொல் பார்க்கலாம். இந்த ஐவரில் மண்டோரிதான் விதிவிலக்கு அவளையும் ஆராய்ந்து பார்த்தால், ஒருவேளை தேறமாட்டாள். ஆகையால், நமது புராணங்கள் பத்தினித் தன்மையை கற்போடு இணைக்கவில்லை. உன்னை மாதிரி ஆசாமிகள்தான் இணைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கை என்பதும் புராணச் செய்திகள் தான்." "அய்யோ எனக்கு தலை சுத்துது. காரை வீட்டைப் பார்த்து திருப்புங்க” “வந்ததே வந்துட்டோம். பக்கத்துல இருக்கிற கிளப்புக்கு போயிட்டு போகலாம். கேய் பாய்ஸ் - அதுதான் ஓரினச் சேர்க்கைக் காரர்கள் கிளப். நான் அந்த கிளப்போட பொதுச் செயலாளர். இதுவரைக்கும் வந்துட்டு, அங்கே போகலன்னர் என்னுடைய பதவியும், எனக்கு கிடைக்கிற வெளி நாட்டுப் பணமும் போயிடும்." "பார்த்தியா. பார்த்தியா. உன் செயலுக்கும் பேச்சுக்கும் வித்தியாசம் தெரியுதோ, அங்கே கொண்டு போய் என்னை என்ன செய்யப்போறே?" "தட்டுக்கெட்ட முண்ட எங்கம்மா மேலேயோ, பொம்பள பொறுக்கியான எங்கப்பன் மேலயோ சத்தியம் செய்ய முடியாது இதோ என் தலையிலேயே சத்தியம் செய்றேன் ஒன்மேல ஒரு துரும்புகூடப் படாது. நீ கார்லேயே இரு நான் கால் மணி நேரத்துக்குள்ள திரும்பி வந்துடுறேன் நாளைக்குத்தான் எங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/182&oldid=762241" இலிருந்து மீள்விக்கப்பட்டது