பக்கம்:ஒத்தை வீடு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 183 ஐரோப்பிய பாஸ் வரார். அப்போ மட்டுந்தான் பிளபியா இருப்பேன்." "எப்படியோ சதி செய்து என்னை கூட்டிட்டு வந்துட்டே." "இதுக்குத்தான் பத்து கிலோ மீட்டருக்கு முன்னால உள்ள மோட்டலுல பேசிட்டு திரும்பலாமுன்னு நினைத்தேன் காரியத்த கெடுத்ததே நீதான். என்னை மீறி ஒனக்கு எதுவும் நடக்காது. நான், நாட்டியக்காரன் மட்டுமல்ல குஸ்தி கத்துக்கிட்டவன். பயப்படாதே." செல்வா மெளனமானான். அந்தக் கார், கேய் பாய்ஸ் கிளப்பை நோக்கி போகலாமா? வேண்டாமா? என்பது போல் தள்ளாடித் தள்ளாடி ஓடியது. % சென்னையிலிருந்து முன்பு மகாபலிபுரத்திற்கும், இப்போது பாண்டிச்சேரிக்கும் அழைத்துச் செலுத்தும் கிழக்கு கடற்கரைச் சாலை. பெருநகரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் சாலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் பதுங்கிக் கிடந்த தர்பார் கட்டிடம். ஏக்கர் கணக்கில் சுற்றி வளைத்து, இரும்புக் கம்பி இழைகளால் வேலி போடப்பட்ட அதன் வளாகத்தில், அசோக, ஆல, அத்தி போன்ற மரங்கள் அந்த கட்டிடத்தை மறைத்துக் கொண்டிருந்தன. அதற்குள் போவது காடு மலை தாண்டி போவது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும். இடையிடையே பாறைக் குவியல்கள். மூன்று கிலோ மீட்டரில் முக்கால் வாசியை முடித்து விட்டால், கத்தரித்த ஆடாகவும் மாடாகவும் புலியாகவும் சிங்கமாகவும் பல்வேறு வடிவங்களில் மேக்கப் செய்யப்பட்ட புல் வகையறாக்கள். சிகை அலங்காரம் செய்யப்பட்ட கற்றாழைகள். பல்வேறு வண்ணத்தில் அமைந்த தாமரைகள். இதன் மேல்தளத்திற்கு, ஒரு பெருந்துணில் சுற்றி வளைத்த படிகள் வழியாகத்தான் போகவேண்டும் ஏனோ லிப்ட் வைக்கவில்லை. மேல்தளத்தின் அடிவாரத்தில், பூவாய் விரிந்த விளக்குகள். வானவில் போன்ற மின்சார வரவேற்பு வளைவுகள். நான்கடி உயரத்தில் நவீன மேடை அரைகுறை ஆடைகளோடு ஒரு சில முதியவர்களும், பல நடுத்தர வயதுக்காரர்களும், பெரும்பாலான இளைஞர்களும் மண்டிக் கிடந்தார்கள் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/183&oldid=762242" இலிருந்து மீள்விக்கப்பட்டது