பக்கம்:ஒத்தை வீடு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 185 மோகனன், தவியாய் தவித்தான் பாலுக்கு காவலாயும், பூனைக்குத் தோழனாகவும் இருக்க வேண்டிய நிலைமை. செல்வாவிடம் ஒடி விடு என்று தமிழில் சொல்லலாம் என்றால், இந்த மையத்தின் துணைச் செயலாளர், அந்த உலக நிறுவன இயக்குநருக்கு போட்டுக் கொடுத்துவிடுவான் பழையபடியும் சினிமா உதிரியாக வேண்டும். இதற்குள் அந்த மனிதர், உடனடியாய், புரியாத ஆங்கிலத்தில் பேசினார். "லெட்டஸ் கோ மோக்." மோகனன், செல்வாவை, கண்டுக்காமல் அதே சமய ம் முதுகுக்கு பின்னால் கையை வளைத்து அவனை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, மிஸ்டர் ஜான் ஜோவுடன் இணையாக நடக்கப் போனான். உடனே அவர், பிரிங் தட் பாய். லெட் இம் ஆல்சோ என்ஜாய் என்றார். உடனே இவன் அவன் என் மைத்துனன். தங்கையின் "உட்பி என்றான். சோ வாட் என்றார் அவர். இதற்குள் துணைச் செயலாளர் சத்ருக்கன், குலுங்கிக் குலுங்கி நடந்து, செல்வாவை வெளியே இழுத்து, அந்த வெள்கைக்காரர் முன்னால் நிறுத்தினான். எல்லோரும் மேல்தளத்திற்கு ஏறிக் கொண்டி ருந்தார்கள். கட்ைசியாக தயங்கி நின்ற செல்வாவிடம் எப்படியாவது இங்கிருந்து ஓடிடு. இவர் என்னுடைய பாஸ். இவர் சொல்லை என்னால தட்ட முடியாது. என்று கிசுகிசுத்தான். உடனே செல்வா, வார வழியில தேக்குத் தோப்புல நரிகளப் பார்த்தேன். நான் எப்படித் தனியா போறது? என்னை கொண்டு போய் விடுறது உன்னுடைய டுட்டி. என்றான். 'சரி வா. பார்த்துக்குவோம். என்று சொல்லிக்கொண்டே செல்வாவையும் இழுத்துக் கொண்டு படியேறினான். அந்த வெள்ளைக்காரர், மேடையேறி, அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, மோகனன் செல்வாவிடம் அதோ அந்த் அறைக்குள் போய் பதுங்கிக்கோ. நான் வருவது வரைக்கும் கதவைத் திறக்காதே என்றான். செல்வா திருப்பிக் கேட்டான். "நீ வாறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்." "எப்படியும் மிட் நைட் ஆயிடும்." "அய்யோ. சித்தப்பாவுக்கு என்ன சொல்றது? என்னாச்சோ ஏதாச்சோன்னு துடியா துடிச்சிகிட்டு இருக்கப் போறார்: "உன்னை அப்சர் பண்ணுவதற்காக கிளினிக்கில் வைத்திருக் கதாய், உங்க சித்தப்பாவுக்கு போன் செய்யுறேன். நீ இந்த அறைக்குள்ளேயே இரு மீண்டும் சத்தியமாய் சொல்லுறேன். அந்த வெள்ளைக்காரன் என்னை வேலைய விட்டுத் துரத்தினாலும், உன்னை இழிவாய் பயன்படுத்த அனுமதிக்கமாட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/185&oldid=762244" இலிருந்து மீள்விக்கப்பட்டது