பக்கம்:ஒத்தை வீடு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 புதைமண் மோகனன், அவசர அவசரமாக மேடைக்குப் போய், மிஸ்டர் ஜான் ஜோவிடம் பேசிக் கொண்டிருந்தான். பிறகு, மேடையை விட்டு படி வழியாக இறங்காமல் அப்படியே கீழே குதித்து சுழல் படிகளில் கீழே இறங்கி, அருகே உள்ள ஹே பாய்ஸ் மறுவாழ்வு மைய அலுவலகத்திற்கு ஓடினான். இதற்குள், மோகனன் காட்டிய அறைக்கதவை, செல்வா தொட்டான். தொடப் பொறுக்காமல் அது திறந்தது. உள்ளே ஒரடி வைத்தவன் தனது சித்தியை பார்த்ததுபோல் பயந்து திடுக்கிட்டான், அந்த அறைக்குள் ஆண்களும் ஆண்களும் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து கிடந்தார்கள் ஒவ்வொருவர் வாயிலும், இடுப்புக்குக் கீழேயும் பல்வேறு நபர்களின் உறுப்புக்கள். ஒவ்வொருவரும் ஏழெட்டு பேருக்கு ஈடு கொடுத்தும், ஈடு செய்தும் முழு நிர்வாணக் கோலத்தில் அலங்கோலமாக கிடந்தார்கள். இலை தழைகளோடு பூத்துக் குலுங்க வேண்டிய பூக்கள் காய்ந்து போன காம்புகளாய், கிழிந்து போன இதழ்களாய், சிதறிப் போன மகரந்த தூள்களாய், வண்டுகளே பூக்களாய். பூக்களே வண்டுகளாய். எட்டறக் கலந்து கிடந்தார்கள். (அதாவது எட்டுபேர்) இவர்களின் வலுவான குலுக்கலுக்கும் புரட்டலுக்கும் இடையே மென்மையான 'டிங். டிங். இசை, வெளியே வந்த செல்வாவுக்கு, உறுப்புகளில் ஒன்றுகூட இயங்க வில்லை. நினைத்துப் பார்க்கவே அசிங்கமாய். அருவெருப்பாய் தெரிந்தது. மிருகங்களுக்குக்கூட பாலியல் உறுப்புக்கள் இலை மறைவு காய்மறைவாய் உள்ளன. பசு மாட்டின் வால், அதன் உறுப்பை மறைக்கிறது. நாய்க்கு அடிவாரத்தில்தான் அதன் உறுப்பு உள்ளது. காகங்கள் உள்ளிட்ட சில பறவைகள் புணர்வதை பார்க்க முடியாது. ஆனால், இவர்களோ மிருகங்களை விடக் கேவலமாய், அசிங்கம் பிடித்த அம்மணமாய், அலங்கோலமாக கிடக்கிறார்கள். செல்வாவிற்கு மீண்டும் குமட்டிக் கொண்டு வந்தது. பத்து நிமிடம் ஒரு துரண் மறைவில் நின்றான். மோகனனைக் காணவில்லை. ஒருவேளை, அவன் வேண்டும் என்றே தன்னை இங்கே கூட்டிக் கொடுத்துவிட்டு போயிருப்பானோ என்ற சந்தேகம். அதுவே கோபமாக, தாபமாக அந்த துணை இரண்டு கைகளாலும் மாறி மாறி குத்திக் கொண்டிருந்தபோது, மிஸ்டர் ஜான் ஜோ ஓடி வந்தார். அவனை, தன் தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டார் "டேக் இட் ஈஸி மை எங் மேன். டிட் யூ ஈட்." "டோன் வாண்ட் ஈட். எனக்குப் பசிக்கல. என்னை விட்டா போதும். மோகனன் பயல் எங்கே?" என்று வெள்ளைக்காரருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/186&oldid=762245" இலிருந்து மீள்விக்கப்பட்டது