பக்கம்:ஒத்தை வீடு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 189 போடுவதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. இதுவரை பசுவாக, ஆடாக கிடந்த இவன், இப்போது கட்டிளங் காளையாய், அசல் மாடாய் ஆகிப் போனான். ஆனாலும், கீழே கிடக்கும் வெள்ளையரை ஒரு பெண்ணாகப் பாவித்துக் கொண்டான். கால்மணி நேரத்தில், அவனுள் ஒரு சுகம் தெரிந்தது. இதுவரை அனுபவித்தறியாத சுகம். கன்னி கழியாதவனுக்கு கிடைத்த முதல் தீனி, சுவையான தீனி, சுகமான தீனி. தீனி முடித்ததும் உடலெங்கும் ஒரு ஆயாசம். ஒரு குற்ற உணர்வு. செல்வா, மிஸ்டர் ஜான் ஜோவிடமிருந்து புரண்டு தரையில் குப்புற விழுந்தான். அவன் மீது மது வெறியிலும், மோக வெறியிலும் பாயப்போன துணைச் செயலாளரை அப்போதுதான் வந்த மோகனன் பிடித்துக் கொண்டான். கீழே கிடந்த மிஸ்டர் ஜான் ஜோ, "மோக். நோ. வயலன்ஸ். வெளி பேட்ட லெட் தம் என்ஜாய். டோண் பி எ கில் ஜாய். (மோகனா, நீ செய்வது தவறு. அவர்கள் மகிழட்டும். மகிழ்ச்சிக்கு கொலைகாரனாகாதே.) என்று தான் நடத்தியதில் திருப்தியும், செல்வா நடத்திக் காட்டிய மகிழ்ச்சியும் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும் என்பதுபோல், கை கால்களை அங்குமிங்குமாய் ஆட்டினார். செல்வாவும், அவனைப் பார்த்து கையை ஆட்டி "ஐ லைக் இட் ஐ லைக் இட்" என்றான். இடுப்புக்கு கீழே அம்மணமாய் கிடந்த செல்வாவை, தூக்கி நிறுத்திய மோகனன், எவனோ கழட்டிப் போட்ட பேண்டை எடுத்து அவனை மாட்டச் செய்தான். கழுத்து வரைக்கும் சுருக்கி வைக்கப்பட்ட பனியனையும், பனியன் மேலான சட்டையையும் கீழே இழுத்து விட்டான். அந்தக் கூட்டத்தை அனல் கக்க பார்த்துவிட்டு, செல்வாவுடன் சுழல் படிகளில் இறங்கி, தரை தட்ட நின்றான். செல்வாவை, அணைத்தபடியே தனது காருக்குள் ஏற்றினான். அந்தக் கார் நான்கு சக்கர பாய்ச்சலில் கண் மண் தெரியாமல் ஒடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில். இந்த இரவில். இவனை சித்தப்பாவிடம் ஒப்படைக்க முடியாது. காரை ஒட்டிக் கொண்டே இருக்க வேண்டும். பெட்ரோல், ரிசர்வ்க்கு வரும்போது, அதே இடத்தில் நிறுத்த வேண்டும். இருட்டு மயமான சாலையில், எதிரே வரும் வாகன ஒளியை வைத்தே ஒரு அனுமானத்தோடு, கார் ஒட்ட வேண்டும். அந்த ஒளியின் பரிமாணத்திற்கு ஏற்ப வண்டியின் எதிர் வாகனத்தின் கன பரிமாணத்தை உணர்ந்து, காயை நகர்த்துவதுபோல் காரை நகர்த்த வேண்டும். பின்னால் வரும் வண்டிகளின் விளக்கு வெளிச்சம், கார் கண்ணாடியில் பிரதிபலிப்பதை அனுமானமாகக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/189&oldid=762248" இலிருந்து மீள்விக்கப்பட்டது