பக்கம்:ஒத்தை வீடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஒத்தை வீடு மனோகர் இல்ல. வீட்டுக்குக் கெட்ட பிள்ளையானாலும் பரவாயில்ல. ஊருக்கு நல்ல பிள்ளையாய் பேர் வாங்க நினைக்கான்னு சொன்னேன். கேட்டியாடி என் பேச்சை.? எப்படிப் பலிச்சிட்டு பாரு' மனோகர், அதட்டினான். "எம்மா. இதுக்கு மேலே பேசினே. திண்ணைக்குக் கூட வராமல், திரும்பிப் பாராமல் போயிடுவேன். நீயும் சண்டைக் கோழியாய் நிற்கப்படாதுக்கா. ஊரையும் அனுசரித்துத்தான் போகணும். ஊர்ப் பாதைக்குத்தானே கேட்டாங்க. பெருந் தன்மையா விட்டுக் கொடுக்கலாமில்ல?" "இந்தா பாருப்பா. நீ செய்யனும் என்கிறதுக்காக நான் வரல. ஒன்னைப் பார்க்கறதுக்காகக் கூட வரல. என் புது நாத்தனாரைப் பார்க்க வந்தேன். பார்த்துட்டேன். நாளைக்கே போயிடுவேன். கவலைப்படாதே." "மூக்குக்கு மேலே கோபம் மட்டும் வந்துடும். சரி விவரமாய்ச் சொல்லு." "ஊர்ப்பாதை. வெள்ளையன் தோட்டத்தோட முடியுது. அதுக்கு நேரா. சீமைச்சாமி நிலம், நீள வாக்குல இருக்குது. அதுல பாதை கேட்கலாமில்ல? அதவிட்டுட்டு, பத்தடி தள்ளி இருக்கிற என் நிலத்துல கேட்கிறது என்ன நியாயம்..? ஊர்ப்பாதையை வளைச்சு என் நிலம் வழியாய் விடாமல், சீமைச்சாமி நிலம் வழியா நேராய் விடலாம் இல்லியா. ஏன் விடல.? ஏன்னா, சீமைச்சாமிக்கு ஆள் பலம் இருக்குது. நான். நாதியத்தடய மகள். இல்லாதவன் பெண்டாட்டி. எல்லோருக்கும் இளக்காரமான மயினிதானே.” அம்மாக்காரி, சவாலிட்டாள். "நான் இருக்கும்போது நீ எப்படி நாதியத்துப் போவே. நாளைக்கே நானும் ஊருக்கு வாரேன். எந்தப் பயல் வண்டியடிச் சுட்டு வந்தாலும் முன்னால போய் நின்னு மூக்கணாங் கயிறைப் பிடிக்கேன்..!" மனோகர், சளைத்தான். "சீச்சீ. இது வீடா? ஒரு மாசம் நிம்மதியாய் டில்லியில் இருந்தேன். ஒருவன் கிட்டச் சிபாரிசுக்கு போறது பிச்சை எடுக்கிறது மாதிரின்னு யாருக்கும் தெரியல." "ஒங்களுக்குத்தான் தெரியல ஊர்க்காரன் இருக்கிறவன் நிலத்தை விட்டுவிட்டு, இல்லாதவன் நிலத்தை பிடுங்க வந்தால் எப்படிங்க பாதி நிலத்தை வேணு:முன்னா ஊர்ப்பொதுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/19&oldid=762249" இலிருந்து மீள்விக்கப்பட்டது