பக்கம்:ஒத்தை வீடு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 191 இருபத்தைந்து நிமிஷம் காரை ஒட்டினேன். ஒரு கடையோ, டெலி போன் பூத்தோ கிடைக்கல. எப்படியோ ஒரு இடத்துல மூடப்போன பூத்துக்காரன் கையில காலுல விழுந்து ஒன் சித்தப்பனுக்கு போன் பண்ணிட்டு, அப்பதான் வந்தேன். அதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சிட்டே. என்னை மாதிரியே நீயும் ஆயிட்டு வாரியேடா. இதுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ நானே காரணமாயிட்டேனடா. கூடப் பிறந்த தங்கைக்கே சக்களத்தி ஆக்கிட்டியேடா..." மோகனன், நரிகள் கத்தும் அந்த நள்ளிரவில், காட்டுப் பூனைக்குப் பயந்து காகங்கள் பறந்த அவற்றில் காலடிகளுக்கு கீழே தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். காரில் தலையை முட்டி மோதினான். செல்வா, அவனை தன் பக்கமாக இழுத்தான். அவன் கண்ணிரை துடைத்தான். உடனே, மோகனன் எந்தவித விகற்பமும் இல்லாமல்தான் செல்வாவை கட்டிப் பிடித்தான். ஆனாலும் பற்றிக் கொண்டது.

  1. 0

காரிலிருந்து இறங்கிய செல்வா, முன் நடக்க, மோகனன் பின் நடந்தான். பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு செலுத்த செல்வா வருகிறானா என்று தெருமுனை வரை கண்ணோட்டிய சித்திக்காரி, செல்வாவை பார்த்ததும் பல்லைக் கடித்தாள். அவனிடம் காட்டிய பச்சாதாபம் ஒரு நாள் கூத்தாக முடிந்தது. கணவர் சிவனுப்பாண்டி, மனைவியின் சுபாவத்தை புரிந்து வைத்திருப்பவர் போல் எங்கண்ணன் மகன் பார்வையே ஒரு தினுசா இருக்குறது. நீ ஏதும் தாறுமாறா நடந்துக்கிட்டியா என்றார். படுக்கையறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாமல், அந்த அறைக்குள்ளேயே அவர் அப்படி கேட்டது அவளை பழைய சித்திக்காரியாய் ஆக்கிவிட்டது. நான் வேணுமுன்னா செத்துத் தொலையுறேன்' என்று கணவனுக்கு பதிலடி கொடுத்தாள். தன் தவறை உணர்ந்து கொண்ட அவரும், அதற்குப் பிராயச்சித்தமாக அவளை அணைக்கப் போனார். அவள் அவரது கைகளை உதறிவிட்டு செத்துப் போனவள் போலவே கிடந்தாள். இப்போது செல்வாவைப் பார்த்ததும், மரித்தெழுந்தாள். நாக்கே, நரம்பாய் முறுக்கேற நின்றவள், மோகனனைப் பார்த்ததும் குளிர்ந்து விட்டாள். இதனால் பெரிய இடத்து சாவகாசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/191&oldid=762251" இலிருந்து மீள்விக்கப்பட்டது