பக்கம்:ஒத்தை வீடு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 193 "அங்கிள் நீங்களும் கார்ல ஏறுங்க. உங்களையும் ஆபீசுல கொண்டு விட்டுடுறேன்.” "ஒனக்கு எதுக்குப்பா சிரமம்? ரெண்டும் எதிர் எதிர் திசை” "பாசிட்டிவும் நெகட்டிவும்தான் ஒண்ணா சேரனும் உங்கள பற்றி செல்வா திறையச் சொன்னான். அப்படிப்பட்ட உங்களை என் காரில ஏற்றிக் கொண்டு போய் விடுறது எனக்கு கிடைக்கிற கெளரவம் அங்கிள். என் அப்பா என்கிறவர் மட்டும்." மோகனன், மேற்கொண்டு ஏதும் பேசாமல், முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டபோது அவனது இரு கரங்களும் அந்த காரின் வைப்பர்கள் போல் செயல்பட்டன. செல்வாவின் வருகைக்காக அலுவலக ஆடையுடனும், கூடையுடனும் காத்து நின்ற சித்தப்பாவிற்கு, மோகனனின் தழுதழுத்த குரலோ, முக நனைவோ, தெரியவில்லை. செல்வாவை பார்த்து துள்ளி ஓடி வந்த சுபேதாவையும், அருணையும் காருக்குள் தள்ளி விட்டார். அவர்களோ காருக்குள் நுழைய மறுத்து "எங்கே போனே அண்ணா... ஏன் நைட்ல வர்ல அண்ணா..." என்று அவனை மொய்த்தபோது, சித்திக்காரி, "டைம் ஆயிட்டு. அண்ணாகிட்ட அப்புறமா வந்து கொஞ்சுங்க..." என்று சொல்லிவிட்டு, செல்வாவிடம் ஒட்டிக் கொண்ட பிள்ளைகளை பிய்த்தெடுத்து காருக்குள் போட்டாள். முன்னால் ஒடிய கார் திரும்பாமலே பின்னோக்கி ஓடி வந்தது. சித்தப்பாகாரர் கார் ஜன்னலை தாழ்த்தி வைத்து, அதில் முகத்தை கொக்காக்கி, மனைவிக்கு ஒரு ஆலோசனை சொன்னார். "நம்ம கொல்லைப்புறத்துல இருக்குதே பசலிக் கீரை, அதைக் கழுவி. நல்லா அரைத்து. இவனுக்கு கொடு. வயித்துல புண் இருந்தால் கேட்கும். கூழ் மாதிரி ஆக்கி நீயும் குடி இந்த பசலி எதிர்கால வயித்து நோய்க்கும் ஒரு இன்சூரன்ஸ் மாதிரி. அதனால் பசலிக் கீரையை பறித்து. நல்லா கழுவி..." "பறிக்கிறதை கழுவணு முன்னு எனக்குத் தெரியாதா? அரைச்சால், கூழ் மாதிரி ஆகும் என்கிறத நீங்க சொல்லிக் கொடுக்கணுமா?" சிவனுப்பாண்டி, எதுவும் பேசவில்லை. ஆனாலும், இதன் எதிரொலிப்பு செல்வா மீது விழுமோ என்று அச்சப்பட்டார். அலுவலக அவசரத்தில் அது பெரிதாக தெரியவில்லை. அவளை தாஜா செய்வதாக நினைத்துத்தான், நீயும் குடி என்றார். ஆனால், அவளோ குடிகாரி மாதிரியே பேகறாள் அறிவு கெட்டத் தனமா பேகறியே” என்று இவன் முன்னால் கேட்டது தப்புத்தான் இரவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/193&oldid=762253" இலிருந்து மீள்விக்கப்பட்டது