பக்கம்:ஒத்தை வீடு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

// செல்வா, லுங்கியில் பேண்டுக்கும் தாவியதும், அவன் எங்கேயோ புறப்படுகிறான் என்று யூகித்துக் கொண்ட அருண், "நானும் வாரேன் அண்ணா” என்றான். "நானும்" என்றாள் சுபேதா. பொதுவாக இந்த மாதிரி மாலை மயக்க நேரத்தில் செல்வா, இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு கடற்கரைக்கு போவான். ஒவ்வொரு கையிலும் ஒவ்வொருவரை பிடித்துக் கொண்டு, அருகே உள்ள கடற்கரைக்கு பொடி நடையாய் நடப்பான். சுபேதாவின் கால் வலித்ததும், அவளை தோளில் போட்டுக் கொள்வான். அண்ணனோடு உட்கார்ந்து குடை ராட்டினம், ஆகாய ராட்டினம் போன்றவற்றில் சுற்றுவதும், வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் நடக்கும் சங்கதிகள். அதோடு பெரிய பெரிய பலூனாய் வாங்கிக் கொடுப்பான். அம்மா, கூட்டிப் போனால், ராட்டினத்தில் ஏற்றாமல், குடை ராட்டினம் போல் தலைமுடி அவிழ்வதையும் பொருட் படுத்தாமல், அவர்கள் தலையில் குட்டுவாள். ரெடியாகுங்க என்று கூறும் அண்ணன், இப்போது தன்னந்தனியாக புறப்படுவது கண்டு, அருண் குழம்பினான். குழந்தைகள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னார்கள். செல்வ்ாவிற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "நான் போகிற இடத்துக்கு நீங்க வரப்படாது." "எந்த இடத்துக்கு அண்ணா” "எந்த இடமா இருந்தால், ஒனக்கென்னடா? வேணுமுன்னா, ஒங்கம்மாவ பீச்சுக்கு கூட்டிட்டு போகச் சொல்லுங்க" சித்தப்பா பிள்ளைகளை அலட்சியப் படுத்தியபடியே செல்வா, இரண்டு எட்டு வைத்தபோது, அருண் அவன் முன்னால் போய் நின்று வழி மறியல் செய்தான். சுபேதா அவன் கையைப் பிடித்து இழுத்தாள் செல்வா, அந்த பிள்ளைகளை முரட்டுத் தனமாக கீழே தள்ளினான். தேன் சிந்தும் வார்த்தைகளால் அவர்களிடம் பேசுகிறவன், இப்போது தேனி போல் கொட்டினான். "சனியன்களே. சொன்னா கேட்க மாட்டீங்க? நான் எங்கே தொலைஞ்சா உங்களுக்கென்ன? என்னோட வரப்படாதுன்னா வரப்படாதுதான்." அருணும் சுபேதாவும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்தபடி கீழே கிடந்தார்கள். கடந்த ஒரு வருட காலமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/196&oldid=762256" இலிருந்து மீள்விக்கப்பட்டது