பக்கம்:ஒத்தை வீடு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 புதைமண் ஒலி முழக்கமும், உடல் முழக்கமும் ஒன்றிக்கின்றன. தரை தகிக்கிறது. சதங்கை மணிகளில் ஒன்று உருண்டோடுகிறது. கை மணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மோதி கால் சதங்கைகளோடு இணைகின்றன. இசை, சொல்லாகிறது. உடல் வில்லாகிறது. சொற்கள் செல்லரிக்க செல்லரிக்க, வேர்வையில் குளித்த மோகனனின் உடல் மெல்ல மெல்ல நிதானப்படுகிறது. தாங்க முடியாத வேதனையோடு தாவித் தாவி ஆடியவன், இப்போது தரை இறங்கினான். செல்வாவை அடுத்து அந்தக் குழந்தைகளையும், அவர்களது தந்தையையும் பார்த்தபிறகு நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்ற தத்துவம் அவனுக்கு பரிட்சயமானது. அதற்கு எதிர்ப்பதமாய் ஆகிப்போன தன்னை நினைத்து, தன்னை படைத்த கடவுளை நினைத்து, தன்னை பெற்ற அம்மாவை நினைத்து, தன்னுள்.இருந்த நாட்டியக் கலையை ஒரு வடிகாலாக ஆக்கிக் கொண்டிருந்தான். இப்படி அடிக்கடி ஆடுகிறவன்தான். அது, ஈஸ்வரியை பொன் சிம்மாசனத்தில் உட்கார வைத்து, சிவபெருமான் ஆடினாராமே. ஆனந்தக்கூத்து, அப்படிப்பட்ட நாட்டியம்.ஆனால், இன்றைக்கோ அண்டங்கோடி அண்டங்களும், அண்ட சராசரங்களும் சுயம் சுருங்கி ஒரு அணுவுக்குள் அடங்கியது போன்ற ஊழிக்கூத்து. மோகனனை பயபக்தியோடு பார்த்தபடியே நின்ற செல்வாவை, மோகனன், அப்போதுதான் பார்த்தான். நிதானத்திற்கு வந்து கொண்டிருந்த பாத குலுக்கல்களுக்கு இடையே, கோபம் கோபமாய் கேட்டான். "முட்டாள். மூடா. என் தங்கை வருவது வரைக்கும், இந்தப் பக்கம், நீ, தலை காட்டப்படாதுன்னு ஒனக்கு எத்தன தடவடா சொல்றது.” "நான் ஒன்றும் ஒன்னை பார்க்க வரல. கவிதாவுக்கு, நான் முட்டாள் தனமா எழுதுன லவ் லெட்டரை வாங்கிட்டுப் போக வந்தேன். அதை வைத்து, நீ எப்ப வேணுமுன்னாலும் என்னை பிளாக் மெயில் செய்யலாமே." "அறிவு கெட்ட ஜென்மமே. அதோ அந்த ர்ேக்குல இருக்குது பார். அதுதான் உன்னோட காதல் லெட்டர். எடுத்துக்கிட்டு ஒடுடா." - r - சதுரமாய் மடிக்கப்பட்ட அந்தக் கடிதத்தை, செல்வா ஒடிப்போய் எடுத்துக் கொண்டான். அவனால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவன் கைப்பட எழுதிய கடிதம்தான் செல்வா, அதை பிரித்து பார்த்து அதை படித்து முடிப்பது வரைக்கும் காத்திருந்த மோகனன், ஒரே தாவாய் தாவி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/198&oldid=762258" இலிருந்து மீள்விக்கப்பட்டது