பக்கம்:ஒத்தை வீடு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 199 செல்வாவிடமிருந்த கடிதத்தை பிடுங்கி, கக்கு நூறாய் கிழித்து அவன் தலை மேலேயே போட்டுவிட்டு கத்தினான். "கத்துக்குட்டி பையா! ஒனக்கு எதுக்குடா காதலு? அந்த லெட்டர நான் எப்படிடா வெளில காட்ட முடியும்? அப்படி காட்டினால், என்னோட சிஸ்டர் எதிர்காலமும் பாதிக்கும் என்கிறது எனக்குத் தெரியாதா? அவளும் இந்த மண்ணாங்கட்டி காதலில் சம்பந்தப்பட்டிருப்பது, இந்த கடிதத்திலேயே தெரியுதடா. நல்லா கேளுடா. என் தலையில நானே மண் அள்ளி போட்டிக்கிட்டேன். அதேசமயம் என் தங்கை தலையில மண் அள்ளி போடுற அளவுக்கு நான் மோசமானவன் இல்லடா. திரும்பிப் பாராமல் ஒடுடா." "ஒன் தலையில நீயோ யாரோ அள்ளிப் போட்ட மண்ணு, என் தலையிலயும் விழுந்துட்டுதே. விழ வச்சுட்டியே." "ஒன் தலையில விழுந்தது தூசி தாண்டா..." "துரசியோ தும்போ அதை என்னால மறக்க முடியலியே." மோகனன், மெளனமாய் தலை குனிந்தான். குனிந்த தலையை அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டான். கண் வழி நீரை துடைத்துக் கொண்டான். அப்படியே அசமந்த நிலையில் நின்றான். செல்வா, அவன் தலையை நிமிர்த்தினான். ஆறுதல் சொன்னான். "நீ நல்லவன்தான். ஆனால் இவ்வளவு நல்லவனா இருப்பேன்னு நான் நெனக்கல." மோகனன், அவனை தள்ளி விட்டபடியே கத்தினான். "இந்தா பாரு பையா. இந்த தொடுற வேலைய என்கிட்ட வச்சுக்காத." "என்னை இவ்வளவும் செய்த ஒன்னை, தொடுறதுக்கு உரிமை இல்லியா?" "நான் சொல்றத நல்லா கேளு செல்வா! உனக்கும் என் தங்கைக்கும் இடையில நான் குறுக்காய் நிற்க விரும்பல." "அவளுக்கு ஒன்னோட இந்தப் பழக்கம் தெரியுமா?" "தெரிஞ்சிருக்கணும். ஒரு தடவை ஹோமோ பயல்களையும், லெஸ்பியன் பெண்களையும் நிற்க வைத்துச் சுடனும்முன்னு என்னை சாடை மாடையாக பார்த்துக்கிட்டே, யார் கூடவே டெலி போன்ல பேசினாள் இப்ப அவள் என்னை திட்டியது முக்கியமில்லை. அவள்தான் முக்கியம் நீ அவளுக்கு. அவள் உனக்கு. எனக்கு பம்பாய்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/199&oldid=762259" இலிருந்து மீள்விக்கப்பட்டது