பக்கம்:ஒத்தை வீடு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

『2 கவிதா, வந்ததும் வராததுமாக வாக்கிங் என்ற சாக்கில், அந்த தெருவில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். அப்பாவும் அம்மாவும் தன் கண்ணெதிரில் கொஞ்சுக் குலாவிய தணிக்கையற்ற காட்சிகளை செல்வாவிடம், சொல்லிச் சொல்லி சிரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அம்மாவின் பக்கத்தில் தன்னையும், அப்பாவின் பக்கத்தில் அவனையும் கற்பனை செய்து கொண்டதை சொல்ல வேண்டும் என்று நினைத்தபோது, அவள் முகம் சிவந்தது. சொல்கிறோமோ இல்லையோ, உடனடியாக அவனை இப்போது பார்த்தாக வேண்டும். பொதுவாக, நைட்டியுடன் காலையிலும் மாலையிலும் அந்தத் தெருவில் நடைபோடுகிறவள், அவன் வந்தால் அவனுடன் சேர்ந்து, போவதற்காக பாவடை, தாவணி மாதிரி தனித்தனி நிறத்தோற்றம் காட்டிய கீழே வெளிர் மஞ்சளும், மேலே மஞ்சள் சிவப்புமான புடவையில், இரண்டு சக்கர வாகனத்தை காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, அங்குமிங்குமாய் சுற்றினாள். "ஏம்மா! அல்பாய்க" என்று சொன்ன வேன் டிரைவர், அப்படி சொல்லப்பட்டவள் கவிதா என்பதை உணர்ந்ததும், "மன்னிச்சுடுங்கம்மா” என்று சொன்னான். அவன் சொன்னது காதில் ஏறாமல் நடந்து கொண்டிருந்த கவிதா, ஏதேச்சையாய் வேனுக்குள் எட்டிப் பார்த்து அதிர்ந்து போனாள். அந்த வாகனத்திற்குள் அருணும், சுபேதாவும் இருந்தார்கள். காக்கா பூக்களுக்குள் இருக்கும் வெள்ளை மொட்டுக்களாக பிள்ளைகள் பெரிய மனித தோரணையில் முதுகுச் சுமையோடு உட்காந்திருந்தன. வேன், அங்கே நின்ற நேரத்திற்கு ஈடு கட்டுவதுபோல் பாய்ந்து பறந்தது. கவிதா அதிர்ச்சியில் தலையை பிடித்துக் கொண்டாள். ஒருவேளை செல்வாவை, அவன் சித்தி துரத்தியிருப்பாளோ? இவனே ஒருநாள் தன்னிடம் சொன்னதுபோல் எங்கேயாவது ஓடிப் போய் இருப்பானோ? அல்லது உடல் நலம் சரியில்லாமல். கவிதாவால், பொறுக்க முடியவில்லை. உடனடியாய் ஒரு தீர்மானத்திற்கு வந்தாள் சஞ்சலப்படுகிற மனம் அந்த மனத்துக்காரனை அல்லது காரியை கோழை போல் சித்தரிக்கிறது. பிறகு அந்த சஞ்சலம் உச்ச கட்டத்திற்கு போகும்போது, அதுவே ஆபத்துக்கு பாவம் இல்லை என்று ஒரு முடிவான தீர்மானத்திற்கு வந்துவிடுகிறது அதற்குப் பிறகு எண்ணிப் பார்ப்பது என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/202&oldid=762263" இலிருந்து மீள்விக்கப்பட்டது