பக்கம்:ஒத்தை வீடு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 புதைமண் "நீ, அய்யய்யோ தப்பு. தப்பு. நீங்க வந்தது எங்க வீட்டுக்குள்ள லட்சுமியே வந்தது மாதிரி இருக்கும்மா என்னம்மா விஷயம்." லட்சுமி என்றதும், சிறந்த நடிகையான லட்சுமியை மனதில் பதிவு செய்தபடியே, கவிதா சத்தம் போட்டே பேசினாள். அந்தச் சத்தம், அவனை அங்கிருந்தால் வெளியே இழுத்துக் கொண்டு வரும் அளவிற்கு பெரிதாக இருந்தது. சாடை மாடையாக வீட்டுக்கு வரும்படி, அவனுக்கு சைகை செய்துவிட்டு போய்விடலாம். சித்திக்காரி, அதிசயப்பட்டு கேட்டாள். "தட்டுல என்னம்மா இதுல்லாம்?" "ஒருத்தர் வீட்டுக்கு முதல் தடவையா போகும்போது, பழங்களோட போகணுமுன்னு அப்பா சொல்வார். இது கொடைக்கானலில் வாங்கினது. எடுத்துக்குங்க ஆன்ட்டி.." லட்சுமி எடுத்துக்கொண்டே, கேட்டாள். "இந்த துக்குப் பையில என்னம்மா?” “ஒரு வாரமா வெளியூர் போயிருந்தோமா. எப்படியோ, கரண்டல ஒரு பேஸ் போய் பிரிட்ஜ் கரண் கணைக்ஷன் இல்லாமல் கெட்டுப் போச்சு. அதனால, இந்த துக்குப் பையில இருக்கிற, இந்த பால் பாக்கட்டுகளை, உங்க பிரிட்ஜ்ல வைத்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்." சித்திக்காரி, தனது ஏமாற்றத்தை கை சொடுக்காகவும், அவமானத்தை கண் கலங்கியும் காட்டினாள். அந்தத் தட்டை கவிதா, தன் வீட்டிற்கு தானமாய் கொண்டு வந்ததாய் நினைத்ததில் ஒரு ஏமாற்றம். அதுகூடப் பெரியதாக தெரியவில்லை. பிரிட்ஜ் இல்லாத ஏழ்மையில் ஒரு அவமானம். தட்டுத் தடுமாறி பேசினாள். “ஸாரிம்மா... எங்க வீட்டுல பிரிட்ஜ் வாங்கி வைக்குற நிலமையில நான் இல்ல. வாங்கக்கூடிய அளவுக்கு சம்பளம் வரத்தான் செய்யுது. ஆனால். ஊர்ல இருந்து, தூரத்து உறவையும், பக்கத்து உறவையும் சொல்லி, இங்கே டேரா போட்டு, இந்த வீட்டையே சத்திரம் சாவடி ஆக்கிட்டாங்க. அதோட அவருக்கு சாமர்த்தியம் அவ்வளவு பத்தாது." கவிதா, இன்னும் அதிகமாய் சத்தம் போட்டே பதிலளித்தாள். செல்வா, இருந்திருந்தால் இந்நேரம் வந்திருப்பார். அவர் எங்கே போனார் என்பதை எப்படி கேட்பது? இவள் தயக்கத்தைப் போல, சித்திக்காரிக்கும் ஒரு தயக்கம். பக்கத்திலிருந்து கொண்டே இப்படிச் சத்தம் போட்டு பேசுகிறாளே, ஒருவேளை, அவளிடம், தன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/204&oldid=762265" இலிருந்து மீள்விக்கப்பட்டது