பக்கம்:ஒத்தை வீடு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 205 யாராவது செவிடு என்று சொல்லியிருப்பார்களோ? என்ற அல்லாடல். எல்லாவற்றையும்விட, கேவலம் தன் வீட்டில், ஒரு பிரிட்ஜ் வாங்க முடியவில்லையே என்ற கொதிப்பும் தவிப்பும் கூடிய பேரவமானம். இதைப் புரிந்த கொண்டதுபோல் கவிதா, தலை குனிந்து நின்றவளின் முகத்தை நிமிர்த்தியபடியே, அவன் தோளில் கை போட்டாள். பிறகு, அவளை மாமியாராகவும், தன்னை மருமகளாகவும் பாவித்துக் கொண்டு, மாமனாருக்கு வக்காலத்து வாங்கினாள். "மாமாவை நினைத்து நீங்க பெருமைப்படனும் அத்தே." ஆன்ட்டி, அத்தையானதில், அவள் அர்த்தம் கண்டுபிடித்து விடக்கூடாதே என்று ஆரம்பத்தில் பயந்த கவிதா, அவள் முகம் மரப்பொம்மையாய் இருப்பதைப் பார்த்ததும், இவளுக்கு தத்துவ உபதேசம் செய்ய தோன்றியது. "மாமா. ஆயிரத்துல ஒரு அரசு ஊழியர் ஆன்ட்டி அவரோட ஆபீஸ் ஒரு பணச்சுரங்கம். அங்கிள் நினைத்தால் ஒரு நாளைக்கு ஆயிரம் ஆயிரமாய் அடிக்கலாம். பிரிட்ஜ் என்ன வாஷிங்மெஷின், ஏ.சி, கம்யூட்டர், கார் - இப்படி "கைண்டா” வாங்கலாமாம். இவர் கண் பார்வைக்கு எத்தனையோ பேர் தவம் இருக்காங்களாம். எங்கப்பா சொல்வாரு... அதுவும் தலை குனிஞ்சுக்கிட்டே சொல்வாரு..." "நீதான் மெச்சுக்கணும். ஆனாலும், எங்க வீட்டு மிஸ்டர் நேர்மையானவர் என்கிறதுல எனக்கும் பெருமைதாம்மா.. எனக்கும் ஒரு பெண் இருக்காள். உன்னை மாதிரியே வளரப்போறாள். இதையும் நான் நினைச்சுப் பார்க்க வேண்டியதிருக்கே அதோட பெரிய இடத்துப் பெண்ணான உன்னை, ஒரு உருப்படியான சோபா செட்டில உட்கார வைக்க முடியலையேன்னு ஆன்ட்டிக்கு ஒரு வருத்தம்." "எளிமையாய் இல்லாமல் நேர்மையாய் இருக்க முடியாது ஆன்ட்டி.." சிறிது இடைவெளி மெளனம். இந்த இடைவெளியில் இரவு வீடு திரும்பும் கணவனிடம் கொடுக்க இருக்கும் கோரிக்கை பட்டியலில் சில அயிட்டங்களை கூட்டிக் கொண்டாள் சித்திக்காரி. கவிதா, சுற்றி வளைத்து விசயத்திற்கு வந்தாள். "ஒங்க வீட்டுப் பொருளை ஏதாவது பிரிட்ஜ்ல வைக்கணு முன்னா. யார் கிட்டயாவது கொடுத்தனுப்புங்க ஆன்ட்டி எங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/205&oldid=762266" இலிருந்து மீள்விக்கப்பட்டது