பக்கம்:ஒத்தை வீடு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 புதைமண் பிரிட்ஜ் இன்னும் ஒரு மணிநேரத்துல ரிப்பேராகி விடும். எங்கப்பா, டுர்ல இருந்தே, எலக்ட்ரிசிட்டி போர்டு சேர்மன் கிட்ட பேசிட்டாரு." இருவர் சிந்தனைகளும், தத்தம் உள் உலகிற்குள் சஞ்சரித்த போது, அதை கலைப்பதுபோல் மேற்கு அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அதிலிருந்து எட்டிப்பார்த்த செல்வாவைப் பார்த்து, சித்தி முகம் சுழித்தாள். கவிதா, சித்திக்காரிக்கு தெரியாமல், அவளுக்கு பின்னால் நகர்ந்து கொண்டு, தலைக்கு மேலே கையை வைத்து, அவனுக்கு சமிக்ஞை செய்தாள். செல்வா, கவிதாவை பார்த்ததுதான் தாமதம் ஏற்கெனவே நொந்து போயிருந்த கதவை படாரென்று சாத்திக்கொண்டான். சித்திக்காரி, கவிதாவிடம் ஒருபாடு அழுதாள். "என் வீட்லேயே இருந்துக்கிட்டு, எப்படி என்னை மூஞ்சில அறையறது மாதிரி சாத்துறான் பாரு. பால் கொடுக்கிற மாட்ட, பல்ல பிடித்து பார்க்கிறான். நீ, பெரிய இடத்துப் பெண்ணு. ஆனாலும், எப்படி ஒரு ஆம்பள வரான்னு என் பின்பக்கமா மறஞ்சிக்கிடறே. இதுக்குப் பேர்தாம்மா வளர்ப்பு முறை." அந்தக் கதவுச் சத்தம், கவிதாவையும் பேயாய் அறைந்தது. ஆனாலும், ஒரு ஆறுதல். அவன் லுங்கியில் இருப்பதை பார்த்துவிட்டு, தனது சமிக்ஞையினால் அவன் பேண்ட், சர்ட்டை போட்டுக் கொண்டு சிறிது காலம் தாழ்த்தி வருவான் என்று அனுமானித்தாள். அவர் சட்டை தொலளதொளப்பாய் இருக்கிற பார்த்தால், என்னை பார்க்காம இளைச்சிட்டார் போலிருக்கே. சாதாரண இளைப்பல்ல. பாதி இளைப்பு. முக மெலிவில் பற்கள்தான் பெரிதாய் தோன்றின. அவள் கிள்ளி விளையாடிய கன்னங்கள், கிண்ண்க் குழிகளாய் தோன்றின. அந்தச் சமயத்தில், அவன் கெளரவத்தில், தன் வீட்டு கெளரவமும் இருப்பதை புரிந்துகொண்ட சித்தி, சிறிது விட்டுக் கொடுத்துப் பேசினாள். "ஒரு வாரமாத்தான் இப்படி எதையோ பறி கொடுத்தது மாதிரி இருக்கான், மற்றபடி, நல்ல பையன்தான். இவருக்கு கூடப்பிறந்த அண்ணன் மகன். தான் இவனை என் சொந்த மகன் மாதிரிதான் நினைக்கேன். ஆனால், அவன்தான் இந்த ஒரு வாரமா." கவிதா, நகைத்தை கடித்தபடியே மெல்லச் சிரித்தாள். அவர் தன்னால்தான் அப்படி இளைத்துப் போயிருக்கிறார். சொல்லாமல் கொள்ளாமல் போனது தப்புத்தான். ஆனால், கதவு மூடித்தானே கிடந்தது. என் மீது இருக்கும் உரிமையான கோபத்தை, இப்படி கதவைச் சாத்தி காட்டுகிறாரா. அல்லது தனக்கும் அவருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/206&oldid=762267" இலிருந்து மீள்விக்கப்பட்டது