பக்கம்:ஒத்தை வீடு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 209 உடையும்படி சாத்திக் கொண்டான். இதற்குள், சமையலறைக்குள் தொலைக்காட்சியின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை யென்றாலும், பாடலை ரசித்துக் கொண்டிருந்த சித்திக்காரி, அது நின்று போனதும், காரணம் கண்டறிய வெளியே வந்தாள் கவிதாவை, மீண்டும் பார்த்த மலைப்பில் நின்றாள் கவிதா, தனது வருகையின் நோக்கத்தை திசை திருப்பிச் சொன்னாள் "எனக்கு போர் அடிக்குது ஆன்ட்டி எதிர்பார்த்த பிரண்ட் வர்ல. வரணுமுன்னு அவசியமும் இல்ல. நீங்க வாங்க ஆன்ட்டி.." "செத்தே இரும்மா. இந்த பேயனுக்கு பொங்கிப் போட்டுட்டு வாறேன். தான் பார்க்காத டிவி. யை, பார்க்க முடியாட்டாலும், காதால கேட்கப்படாது என்கிற ஆங்காரத்துல ஆப் செய்துட்டு உள்ளே.போயிட்டான் பாரு.. இவனல்லாம் உருப்படுவானா?. நீயே சொல்லும்மா." கவிதா, விரக்தியின் விளிம்பில் நின்றாள் ஆகையால், விம்மலோ, தும்மலோ எதுவும் ஏற்படவில்லை. நீங்க ஆற அமர என் வீட்டுக்கு வாங்க ஆன்ட்டி நான், உங்களுக்காக காத்திருக்கேன் என்றாள் பிறகு, அந்த வீட்டையும், வீட்டிற்குள் அவன் இருக்கும் அந்த அறையையும் திரும்பிப் பார்க்காமலே ஒரே போக்காய் வெளியேறினாள்.

  1. 3

செல்வா, குமைந்து கொண்டிருந்தான் இதயம் நெருப்பு பற்றியதுபோல் புகைந்து கொண்டிருந்தது. போர்வையால், உச்சி முதல் பாதம் வரை, அந்த வெயில் நேரத்திலும் இழுத்து மூடினான். இரு கரங்களையும் இடுப்போடு ஒடுக்கி, முடி களைந்தும், மூளை குழம்பியும் குப்புறப் படுத்துக் கிடந்தான் இந்நேரம், அவன், குழந்தைகளின் ஹோம் வொர்க்கிற்கு உதவி செய்திருக்க வேண்டும் ஆனாலும், அவன் உடல், அவர்களுக்கு உதவி செய்தது அவனுக்கு இரு பக்கமும் இருந்த குழந்தைகள், அவன் முதுகிலும், பிட்டத்திலும் நோட்டுப் புத்தகங்களை வைத்து, பென்சிலால் எழுதுவதும், ரப்பரால் அழிப்பதுமாய் இருந்தன அருண், சுபேதாவிற்கு திடீர் ஆசிரியரானான். அவள் தலையில் அடிக்கடி குட்டினான். இவளும் ஆசிரியை குட்டை விட, அது லேசாக இருந்ததால், அண்ணன் குட்டை பொறுத்துக் கொண்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/209&oldid=762270" இலிருந்து மீள்விக்கப்பட்டது