பக்கம்:ஒத்தை வீடு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 புதைமண் இவன் காதலியாகும்போது, மோகனன் காதலனாகிறான். போயிற்று. எல்லாம் போயிற்று. தந்தையின் குனிந்த தலையை நிமிர்த்துவதற்குப் பதிலாய், தன் பங்கிற்கும் இவன் தாழ்த்தியாயிற்று. சித்தப்பாவிற்கு நம்பிக்கைத் துரோகம் செய்தாகிவிட்டது. இப்போது, வெறும் சதைப் பிண்டம். உயிர் இருப்பதால் மட்டுமே உலாவும் நடைப்பிணம். 'சண்டாளி; சதிகாரி நீ மட்டும் என்னை வம்புக்கு இழுத்து காதலிக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் நான் முழுமையான மாணவனாய், பாசமிக்க சித்தப்பாவிற்கு, நன்றி மறக்காத அண்ணன் பிள்ளையாய், குழந்தைகளுக்கு தோழனாய், ஒரு முழுமையான மனிதனாய் தலை நிமர்ந்து நடந்திருப்பேன். என்னை கெடுத்துட்டியேடி! அர்த்த நாரீஸ்வரனாய் என்னை ஆக்கிட்டியேடியடி நீ வஞ்சகி. உன்ன்ரிடம், நானே நினைத்துப் பார்க்க கூசும் என் சம்பந்தப்பட்ட விவகாரங்களை சொல்லி இருக்கிறேன். ஆனால் நீயோ, உனக்கு ஒரு டுப்ளிகேட் அம்மா இருப்பதைப் பற்றியோ, உன் அண்ணன், ஓரினச் சேர்க்கைக்காரன் என்றோ சொல்லல. சொல்லியிருந்தால் பிழைத்திருப்பேன். இப்போ சாகாமல் செத்துட்டேனடி. செல்வா, வெந்து தணியாமல் வெந்து கொண்டே கிடந்தான். இதற்குள் அருண், இவன் மார்பில் நோட்டுப் புத்தகத்தை நகர்த்தி, கண்ணுக்கு கீழே கொண்டுவந்து, அண்ணா! வாட் ஈஸ் திஸ் சர்க்கிள் என்றான். சுபேதாவோ, அண்ணா நான் வேன்ல போகமாட்டேன். அண்ணனோட ஸ்கூட்டர்லதான். போவேன் என்று தான் என்பதற்கும், போவேன் என்பதற்கும் அழுத்தம் கொடுத்தாள். செல்வாவால் எரிச்சலை அடக்க முடியவில்லை. சுபேதாவின் காதை வலது கையால் திருகிக் கொண்டே அருணின் கன்னத்தை இடது கையால் பிதுக்கிக் கொண்டு கத்தினான். "சனியங்களா. ஒங்கம்மா கிட்டப் போய் பாடம் கேளுங்க.." என்று சொன்னபடியே, அருணின் நோட்டுப் புத்தகத்தை கீழே வீசியடித்தான். அந்த வீச்சில், அந்த நோட்டு, தாள் கிழிந்து, அட்டை விலகி, அலங்கோலமாய் கிடந்தது செல்வா, தனது முட்டாள்தனத்தை உணர்ந்ததுபோல், இரண்டு குழந்தைகளையும் விடுவித்துவிட்டு, அந்த நோட்டுப் புத்தகத்தை எடுப்பதற்காக எழுந்தபோது - வாசலில், சித்தப்பா! மனைவி, ஏற்னெவே குழந்தைகளிடம் இவன் நடந்து கொள்ளும் விதம் குறித்து சொல்லியிருக்கிறாள். அதனால்தான், குழந்தைகளை, வேனில் அனுப்ப சம்மதித்தார். இப்போது, அருணும், சுபேதாவும், கேவியபடியே அப்பாவின் கைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/212&oldid=762274" இலிருந்து மீள்விக்கப்பட்டது