பக்கம்:ஒத்தை வீடு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£42 செல்வா, தலைவிரி கோலமாக நடந்து நடந்து, சொந்த ஊருக்கே நடக்கப் போவதாக அனுமானித்தான். அந்த நடைவேகத்தில், அடையாரின் விளிம்பில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை இருக்கும் பிரதானச் சாலைக்கு வந்தபோது, இளைத்துவிட்டது. அயோத்தி நகரை தாண்டிய உடனே, காடு எங்கே இருக்கிறது என்று சீதை கேட்டாளாமே - அப்படிப்பட்ட இளைப்பு ஊருக்கு நடந்து போகமுடியாது என்பது புரிந்து விட்டது. தனக்குத்தானே ஒரு சமாதானமும் செய்து கொண்டான். ஊருக்குப் போய் சித்தப்பாவிற்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கக்கூடாது. எதிரற்று போன எதிர்காலத்தைப் பற்றி, எங்கேயாவது உட்கார்ந்து யோசிக்கவேண்டும். இந்தியாவின் விஞ்ஞான மூளையான ஐ.ஐ.டி க்கு அருகே உள்ள கிளைச்சாலையில் நடந்தான். வழக்கம்போல், குழந்தைகள் பூங்காவிற்குள் இந்தத் தடவை டிக்கெட் வாங்காம்லே கண்மூடித்தனமாக நுழையப் போனான். வாட்ச் அண்டு வார்டு மேன் டிக்கெட் என்றான். வழக்கம்போல், ஒவ்வொரு தடவையும் தன்னை இப்படி கேட்க வைக்கும் அவன் மீது வார்டு எரிச்சலானான். அதேசமயம், அந்த குழந்தை முகத்தைப் பார்த்ததும், எரிச்சல் அனுதாபமானது. அதோடு, தான் கடமையில் கண்ணுமாய் இருப்பதை "கவுண்டனுக்கு" நிரூபித்துக்காட்ட பல வாய்ப்புக்களை வழங்கும் செல்வாவை, நன்றியுடன் நினைத்துக் கொண்டான். செல்வா, கவுண்டரில் போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு, அதை வாட்ச்மேனிடம் கிழிக்கக் கொடுத்துவிட்டு, கிழிப்பில் பாதியை வாங்காமலே உள்ளே போனான். ஓங்கி வளர்ந்த அத்தி, ஆல, அரச மரங்களின் அடிவாரங்களில் ஒவ்வொன்றிலும் கைகளை மட்டும் பிடித்துக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள், லுங்கியோடு திரிந்த இவனைப் பார்த்து சிறிது அச்சப்பட்டார்கள். அதேசமயம் தங்களைப் போலவே கல்லூரிக் கோடு தாண்டிய, கல்லூரி "மேட்டுகள்” அருகில் இருப்பதால், அச்சம் தவிர்த்தார்கள். செல்வா, அங்குல அங்குலமாக நகர்ந்து, அடி அடியாய் ஊர்ந்து, மீட்டர் மீட்டராய் தாவி, ஒரு ஆலமரத்தின் அருகே உள்ள கரையான் புற்றில் சாய்ந்து கால்களை நீட்டிக் கொண்டான். புற்றுமண் உரசலில் அவன் படிப்பும், பந்த பாசமும் கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபோன பழமொழியை நினைவுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/216&oldid=762278" இலிருந்து மீள்விக்கப்பட்டது