பக்கம்:ஒத்தை வீடு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 217 கொண்டு வந்தது. அந்த புற்றின் உச்சி உடைந்து, சல்லடை போட்டது போன்ற குருத்து மண் துகள்கள், அவன் தோள் வழியாய் உருண்டோடிக் கொண்டிருந்தன. எதிரே சிறுவர்சிறுமியர் சாய்வாய் போடப்பட்ட சறுக்குப் பலகையில் வழுக்கி வழுக்கி விழுந்து கொண்டிருப்பதை பார்த்ததும், சித்தப்பா பிள்ளைகளின் நினைவு வந்தது. கூடவே கண்ணிரையும் கொண்டு வந்தது. அந்த நினைவோடு, கவிதாவின் நினைவு வெறுப்புக் குரியதாகவும், மோகனனின் நினைவு "லவ்-கேட்” எனப்படும் விருப்பும் வெறுப்பும் கலந்த கலவை உணர்வாகவும் -lഖഖ് பிழிந்தெடுத்தன. சித்தியை, அடிக்கப் போவதுபோல், அவ ை7 நெருங்கி மிரட்டியதற்காக, நாக்கை பற்களால் துண்டாக்கப் போனான். செல்வா, அந்த புற்றின் மேல் சாய்ந்தான். சாயச் சாய அது சரிந்தது. இதை புதை குழியில் கிடப்பதுபோல் கிடந்தான். ஆங்காங்கே கேட்ட சிரிப்பும், கும்மாளமும் தன்னை நையாண்டி செய்வதுபோல் தோன்றியது. கணக்கிலும், விஞ்ஞானத்திலும் நூற்றுக்கு நூறாய், தொன்னூறாய் வாங்கியவன் கல்லூரி வகுப்புக் கணக்கில் பத்துக்கு பத்தாய் வாங்கியவன், இப்போது மனிதன் என்ற “ஒன்று” போய் சைபராய் கிடந்தான். அந்த எதார்த்தத்தை உள்வாங்க முடியாமல், சிறிது நேரத்தில் பிணத் துக்கம். "செல்வா. செல்வா." பதில் கிடைக்காததை கண்ட கவிதா, அவனை உலுக்கினாள். அவன் அருகே உட்கார்ந்து அங்குமிங்குமாய் ஆட்டினாள். அவன் மூக்கில் கை வைத்த பிறகுதான், அவளுக்கும் சுவாசமே.இயங்கியது. அவனுக்குத் தெரியாமலே அவன் பின்னால் நடந்து, அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தளர் நடையாகி, அவன் தலை திரும்பிய பாதையில் நடந்தாள். பாம்புப் பண்ணையில் தேடினாள், பிறகு, ஒரு அனுமானத்தோடு இங்கே வந்தாள் மூச்சடைக்க அலைந்தாள். எப்படியோ கண்டுபிடித்து விட்டாள். "செல்வா. செல்வா." செல்வா, அவள் உலுக்கலில் இருந்து கண் விழித்தான் கோபத்தை காட்டுவதுபோல் பல் கடித்து எழுந்தான். ஆவேசக் குரலில் கேட்டான். "உன்னை யார் என் பின்னால் வரச்சொன்னது?" "நான் ஒன்றும் உங்கள் பின்னால் வரல. நீங்கதான் என் முன்னால போனிங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/217&oldid=762279" இலிருந்து மீள்விக்கப்பட்டது