பக்கம்:ஒத்தை வீடு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 புதைமண் இல்லை. தனிமையில் விடப்பட்ட ஒரு மனித pவியாக நினைக்கிறேன். அதனால." "போதும் நிறுத்துங்க. எதிர்காலத்துல ஒரு நல்லவனா பார்த்து கல்யாணம் செய்துக்கன்னு சொல்லுவீங்க. அவ்வளவுதானே?" "அப்படிச் சொல்ல எனக்கு உரிமையில்ல. உண்மையைச் சொல்லப்போனால், ஒங்கண்ணனோட எனக்கு கிடைத்த முதல் அனுபவத்தில் எப்படி எனக்கு குமட்டிக் கொண்டு வந்த்தோ, அப்படி உன்னோட உரசல்களும், முத்தங்களும் இப்ப எனக்கு குமட்டுது." "ஏய் பாவி, நீ உருப்படுவியா? என்னையும் இவரையும் இந்த நிலைக்கு ஆளாக்கிட்டு எங்கேயோ போயிட்டியேடா. நீ நிச்சயம் நல்லா இருக்க மாட்டடா" "நல்லாத்தான் இருப்பார். அவரோட முகவரிய அவர் கிளப்ல போய் வாங்கிட்டேன். நானும் உருப்படுறதுக்கு ஒரு வழி இருக்கு. உங்கண்ணன் நிரந்தரமாய் போன பம்பாய்க்கு, நானும் போகப் போறேன். என் கையில பைசா இல்லை. நாம பழகின தோசத்துக்காக, நீ மட்டும் டிக்கெட்டும், செலவுக்கும் பணம் கொடுத்தால், நான் கரையேறிடுவேன்." கவிதா, பிரமித்தாள். பித்துப் பிடித்தவளாய் தலையை அங்குமிங்குமாய் சுற்றினாள். சுற்றும் முற்றும் சூழ்ந்த வேடிக்கைக் கூட்டம், அவள் கண்ணில்கூட பதியவில்லை. கைகளை உதறினாள். கண்களை உருட்டினாள். முன் பல்லால் பின் உதடுகளை கடித்தாள். 'அய்யோ அய்யய்யோ என்றாள். அந்த கூட்டத்தின் தலைகளையும் மீறிப் பார்த்த செல்வாவின் கண்களில், எதிர்ப்புற உதிய மரத்தின் ஒதுக்குப் புறத்தில், அறுபதைத் தாண்டிய ஒரு பெரியவர், கண்பட்டார். ஆடை அலங்காரம் கச்சிதம். வாலிபன்போல் பொம்மை சொக்கா போட்டிருந்தார். சந்தேகம் இல்லை. மோகனன் அழைத்துச் சென்ற அந்த கிளப்பில், நிர்வாணமாக நின்றபடி, தன்னை நிர்வாணப்படுத்திக் கொண்டிருந்தவர். அவரை ஒட்டினாற்போல் ஒரு பத்து வயதுச் சிறுவன். அவனது ஒரு கரம், பெரியவரின் தொப்புளுக்கு கீழே போயிருந்தது. செல்வா, எழுந்தான். வீர அபிமன்யூ போல வேடிக்கை கூட்டத்தை கிழித்தபடியே எதிர்ப்புறம் கால் கிலோ மீட்டர் வரை, குதிகால்கள் தலையில் தட்டாக் குறையாய் ஒடி, அந்த பெரியவர் முன்னால் மூச்சடைக்க நின்றான். அவர், அவனை ஆசுவாசப் படுத்திப் பேசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/220&oldid=762283" இலிருந்து மீள்விக்கப்பட்டது