பக்கம்:ஒத்தை வீடு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 புதைமண் குத்தாய் குத்தினான். தாமோதரனின் வாய் உரலானது. அதற்குள், கிடந்த மண், தானியமானது. செல்வா, கை உலக்கையானது. கவிதா, ஓடோடி வந்தாள். அவள் பின்னால் வேடிக்கை கூட்டமும் ஒடி வந்தது. அதற்குள் பூங்காவின் வாட்ச் அண்டு வார்டு வீரர்கள், செல்வாவை கீழே தள்ளி முன் கைகளை, பின்புறமாய் வளைத்துப் பிடித்தார்கள். அந்தக் கிழவர் சிறிதுநேரம் வெட்கத்தால் தலை கவிழ்ந்தார். அந்த தலையை நிமிர்த்துவதுபோல், "இவனை ஒரு வாரமா வாட்ச் பண்ணிகிட்டிருக்கேன். சரியான பைத்தியம். மேலதிகாரிகள்கிட்ட சொன்னால், "பைத்தியத்துக்கு, எல்லாரும் பைத்தியம் மாதிரி தெரியுமுன்னு' என்னை நக்கல் பண்றாங்க." என்றான் ஒரு வார்டு. தாமோதரன் கிழவருக்கு தப்பிக்க வழி கிடைத்ததுபோல் தோன்றியது. மண் கலந்த கையோடு செல்லுலார் போனை எடுத்தார். £5 குய்யோ முறையோ கூப்பாடோ, ஒப்பாரியோ கேட்க முடியாத இருண்டு அறையில், செல்வா, போய்ச் சேர்ந்தான். முழங்கால் இரண்டிலும் ரூல் தடியை வைத்து உருட்டல், கை நகங்களில் குண்டுசிகளால் குத்தல், காதுகளை நெட்டெடுத்தல், முகக் குத்து, உச்சி முடி இழுப்பு, லத்திக் கம்படி, ஐசில் கிடத்தல் போன்ற அத்தனை தடாலடிகளுக்கும் உட்பட்ட செல்வா, மீண்டும் லாக்கப் அறையில் ஜட்டியோடு நிறுத்தப்பட்டான். ஆரம்பத்தில் கொடாக் கண்டனாக இருந்ததால், விடாக் கண்டரான இன்ஸ்பெக்டரின் ஆணையின் பேரில், காவலர்கள் நடத்திய "விசாரணையில்'; செல்வா கக்கிய உண்மைகள் பொய்களைவிட பயங்கரமாய் தோன்றின. புகார் கொடுத்த தாமோதரன், புள்ளிகளிலே முக்கியமான புள்ளி. அவரா அந்தச் சிறுவனிடம் அப்படி நடந்து கொண்டார் என்பதை இன்ஸ்பெக்டரால் ஜீரணிக்க முடியவில்லை. இவனுங்க தாய்யா இப்படி நடப்பானுங்க என்று காவலர்கள் அவரிடம் சொன்னபோது, அந்த இன்ஸ்பெக்டருக்கு, செல்வா மீது சிறிது அனுதாபம் ஏற்பட்டது சட்டப்படி பெரிய குற்றவாளியான ஒருவர், சின்னக் குற்றவாளி மீது புகார் கொடுத்ததும், அந்த விசாரணையின் போக்கு எதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/222&oldid=762285" இலிருந்து மீள்விக்கப்பட்டது