பக்கம்:ஒத்தை வீடு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 223 கொண்டு போய்விடும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படாததும், இன்ஸ்பெக்டருக்கு குழப்பத்தைக் கொடுத்தது புள்ளியோ பெரிய புள்ளி. அதோடு கரும்புள்ளி. ஆகையால், கிரைம் இன்ஸ்பெக்டரான இவர், இது லா அண்டு ஆர்டர் பிராப்ளம் என்று அருகே உள்ள இருக்கையில் இருந்த எல் அண்ட் ஒ இன்ஸ்பெக்டரிடம் சொன்னார். அந்த எல் அண்ட் ஒவோவோ, பப்ளிக்கா நடப்பதாலேயே, லாவும் ஆர்டரும் சிதைந்ததாக அர்த்தம் இல்லை. இது கிரைம். ஆகையால், கிரைம் இன்ஸ்பெக்ட ரான நீதான் இதை விசாரிக்கணும். என்னை விடுப்பா.. என்றார் லாக்கப் அறையில், வழக்கமாக வாடிக்கையாளர்கள், வம்படித்து சிரித்தபோது, தான் மட்டும் ஜட்டியோடு நிற்பது செல்வாவிற்கு அவமானமாகத் தோன்றியது. ஆனாலும், லுங்கி கிடைத்தால் எப்படியாவது தூக்குப் போட்டோ, இல்லையானால் எப்படியாவது தப்பித்து தண்டவாளத்தில் தலை வைத்தோ, பஸ் முன் பாய்ந்தோ, தீக்குளித்தோ, சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவிற்கு வந்துவிட்டான். இதனால் அவன் முகம் உறுதிப்பட்டது. இதயம் வலுப்பட்டது. பார்வை தீட்சண்யமானது சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் கர்லளவு என்ற பழமொழியை நிரூபிப்பவன்போல் நெஞ்சு நிமிர்த்தி நின்றான். உடலெங்கும், வரிக்குதிரை மாதிரி வரி வரியாய், லத்திக் கம்பு தடயங்கள், ஒரு விரல் பரிமாணத்திற்கு குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள் போட்டிருந்தன. கண் இமைகள் வீங்கிப் போயிருந்தன காதுகளில் ரத்தச் சிதைவுகள். ஆனாலும், இவற்றை பற்றி கவலைப்படாதவன் போல் கைகளை வீரக்கட்டு என்பார்களே விவேகானந்தர் கட்டு அப்படி கட்டிக்கொண்டு, நின்றான். ஒரு டெலிபோன் கூச்சலை மெளனமாக்கிய காவலாளர் ஒருவர், அதன் குமிழை அப்படியே வைத்துவிட்டு, இன்ஸ் பெக்டரின் காதில் கிசு கிசுத்தார் அவரும் அலறியடித்து, பேசவேண்டிய குமிழின் பொந்திற்குள் காதை வைத்தும், கேட்க வேண்டிய குமிழில் வாய் வைத்தும், "எஸ். ஸார்." என்று சொல்லி விட்டு, எதிர் முனை ஆணைக்கு காத்து நின்றார். உடனே, கான்ஸ்டபிள் வாலிபர், அந்த டெலிபோன் கருவியை பலவந்தமாய் பிடுங்கி, உள்ளபடியே வாய்க்கும் காதுக்கும் வைத்து பொருத்தியபோது, கோபக்கார இன்ஸ்பெக்டர், "என்னட 1. செய்யுறே நாய்ப்பயலே என்றார். எதிர்முனையில் என்ன கிடைத்ததோ? இன்ஸ்பெக்டரின் காக்கிச் சட்டை. நனைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/223&oldid=762286" இலிருந்து மீள்விக்கப்பட்டது