பக்கம்:ஒத்தை வீடு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 புதைமண் வேர்வையா? சிறுநீரா? என்று அனுமானிக்க முடி வில்லை. பிறகு, "கான்ஸ்டபிளைத்தான், நான் திட்டினேன். ஸார். த ப்புத்தான் ஸார். கான்ஸ்டபிளையும் அப்படி திட்டக்கூடாதுதான் லார்” என்று கெஞ்சினார். எதிர்முனைக்காரர், ரிலீஸ் த பாய் செல்வா. நோ எப் ஐ ஆர். எங்கே நான் சொன்னதைச் திருப்பி சொல்லு' என்று கேட்டிருக்க வேண்டும் உடனே இன்ஸ்பெக்டர், "ரிலீஸ் த பாய் செல்வா. நோ எப்.ஐ.ஆர் என்று சத்தம் போட்டு கூவினார். எதிர்முனையில் இருந்து என்ன கிடைத்ததோ, எஸ். ஸார் செல்வாவை விடுதலை பண்ணிடுறேன். கேஸ் புக் பண்ணல ஸார். அந்த தாமோதரன் பெரிய புள்ளி ஸார். நீங்கதான் அவர் கிட்டயும். ஒகே. ஒகே. ஸார். உங்க உத்தரவுதான் முக்கியம். அப்புறம், என் மேல போட்ட சார்ச்சீட்டு விசாரணை அறிக்கை உங்க டேபிள்லதான் இருக்குதாம். தப்புத்தான் ஸார். சமய சந்தர்ப்பம் தெரியாம பேசுறேன். ஸார்: என்று சொல்லிவிட்டு, ஆயாசத்தோடு போனை கீழே வைத்தார். முன்பெல்லாம் டெலிபோனில், எஸ். ஸார் என்று சொல்லிவிட்டு, பிறகு, தனது ஜூனியர் சகாக்களிடம், சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி தனது ஆலோசனையை கேட்டதாக தம்பட்டம் அடிக்கும் இவர், இப்போது குட்டு வெளியானதால் குட்டுப்பட்டவர்போல் கிடந்தார். எவ்வளவு பெரிய பதவியிலும் இருக்கும், தப்புத் தண்டா ஆசாமி எவருக்கும், மேலதிகாரி என்று வந்துவிட்டால், வேர்வை சுரப்பிகள் விரைந்து செயல்படும் என்பதும், அசல் பிச்சைக்காரர்கள் மாதிரி கெஞ்சுவார்கள் என்பது போலவும் இன்ஸ்பெக்டர் ஒரு நாடமாடும் வெறும் காக்கித் துணியானார். காலவர்கள் திறந்தால் நேரமாகும் என்று நினைத்தவர்போல், சுவரில் அடித்த பித்தளை கம்பிகளில் தொங்கிய சாவிகளில் ஒன்றை எடுத்து லாக்கப் அறையை திறந்தார். கான்ஸ்டேபிள் ஒருவர், மொபைல் போலீஸ் ஒப்படைத்த செல்வாவை, பய பக்தியோடு பார்த்தார். எங்கிருந்தோ கொண்டு வந்த லுங்கியை அவனை அணியும்படி கெஞ்சினார். ரத்தம் பிசிறிய சதைக் கோடுகளை மறைப்பதற்கு சட்டை இல்லை. அடித்த அடியில் அது நூல் கற்றைகளாகி விட்டன. எதிர்முனைக்காரரின் மகள் வரப் போகிறாளாம். அதற்குள், இந்த பயவின் இடுப்புக்கு மேல் நிர்வாணமான பகுதியை எப்படி மறைப்பது? இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரின் காதில் கிசுகிசுத்தார். அவர் லாக்கப்பிற்குள் போய் அங்கே நின்று கொண்டிருந்த ஒருத்தனின் சட்டையை கழட்டி, செல்வாவிற்கு அவரே மாட்டிவிட்டு, அவனை வி.ஐ.பி. போல் சர்வ சலாம்களுடன் இன்ஸ்பெக்டருக்கு முன்னால் உள்ள நாற்காலியில் உட்கார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/224&oldid=762287" இலிருந்து மீள்விக்கப்பட்டது